Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

UPI பேமன்ட் களத்தில் வாட்ஸ்அப்; ஒப்புதல் அளித்த NPCI... எந்தெந்த வங்கிகளுடன் கூட்டணி?

உலக மக்களின் அபிமான சாட்டிங் சேவையாக இருந்துவரும் வாட்ஸ்அப் இந்தியாவிலும் இன்று பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 40 கோடி இந்தியப் பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பின் பல நாள் கனவாக இருப்பது கூகுள் பே போல இந்தியாவில் ஒரு பேமென்ட் சேவையை வாட்ஸ்அப்புடன் இணைக்கவேண்டும் என்பதுதான். இதன்மூலம் மெசேஜ் அனுப்புவது போலப் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் பணமும் எளிதாக அனுப்பமுடியும்.

வாட்ஸ்அப் பிசினஸ் போன்று வர்த்தக காரணங்களுக்காக பிரத்யேக சேவைகளை வழங்கும் வாட்ஸ்அப், பேமன்ட் சேவையையும் இணைத்துவிட்டால் முழுமை பெற்றுவிடும் என நம்பியது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கை விடப் பெரிய வாய்ப்பாக வாட்ஸ்அப்பை பார்த்ததாலேயே வாட்ஸ்அப்பை வரலாறு காணாத தொகைக்கு வாங்கியது ஃபேஸ்புக் (சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய்). ஆனாலும் அதன் பேமன்ட் கனவு பல நாட்களாக நிறைவேறாமலேயே இருந்துவருகிறது. சில லட்சம் பேருக்கு மட்டும் பீட்டா வெர்ஷன் அளவில்தான் 'வாட்ஸ்அப் பே' சேவை கிடைத்துவந்தது.

Whatsapp

இந்தியாவில் UPI பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் NPCI ஒப்புதல் அளிப்பதில் இழுபறி தொடர்ந்தே இதற்கு முக்கிய காரணம். ஆனால் ஒரு வழியாக நேற்று இந்தியாவில் வாட்ஸ்அப் பே இயங்க ஒப்புதல் NPCI வழங்கியிருக்கிறது. ஆனால் ஒரே மூச்சில் அனைவருக்கும் சேவையைத் தராமல் படிப்படியாகச் சேவையை வாட்ஸ்அப் விரிவுபடுத்த வேண்டும் என NPCI அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 2 கோடி வாடிக்கையாளர் வரை வாட்ஸ்அப் பே சேவையைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது NPCI. ஆனால் வாட்ஸ்அப்பில் இருப்பதோ 40 கோடி இந்தியப் பயனர்கள், இதனால் இந்த சேவையை எப்படி மக்களுக்குப் பிரித்து அளிக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏற்கெனவே பீட்டா வெர்ஷனாக 10 லட்சம் பேர் வாட்ஸ்அப் பே சேவையை இந்தியாவில் பெற்றுவருகின்றனர்.

இந்த சேவைக்காக ஐந்து வங்கிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருக்கிறது வாட்ஸ்அப். அவை பாரத ஸ்டேட் வங்கி, ஹெட்ச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஜியோ பேமென்ட்ஸ் வங்கி.
ரிசர்வ் வங்கி

இதன்மூலம் வாட்ஸ்அப்பின் இரண்டு வருட காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. முதலில் ரிசர்வ் வங்கியின் பயனாளர்களின் தகவல்களை இந்தியாவில் சேமிக்க வேண்டும் என்ற புதிய 'Data Localization' கொள்கைகள் வாட்ஸ்அப்புக்கு பின்னடைவாக அமைந்தது. பீட்டா வெர்ஷன் என 10 லட்சம் பேருக்கு வாட்ஸ்அப் சேவையை வழங்கியிருக்கக்கூடாது என்ற வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இதெல்லாம்தான் தாமதங்களுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்தியாவில் வாட்ஸ்அப் ஒரு சாட்டிங் சேவையாக மட்டுமில்லை. ஃபேஸ்புக்குடன் சமீபத்தில் கூட்டணி அமைத்த ஜியோ ஆன்லைன் வர்த்தகத்தில் வாட்ஸ்அப்பை முக்கிய ஆயுதமாகப் பார்க்கிறது. அதற்கான வேலைகளும் பரபரவென நடந்துகொண்டிருக்கின்றன.

Also Read: ஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay' லோகோவையும் மாற்றும் கூகுள்... என்ன காரணம்?

மற்ற சேவைகளின் நிலை?

UPI

இந்தியச் சந்தையைப் பொறுத்தவரை ஏற்கெனவே ஏகப்பட்ட UPI பேமன்ட் சேவைகள் இயங்கிவருகின்றன. அவற்றுக்கு வாட்ஸ்அப் பெரும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று NPCI இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டது. அது எந்த ஒரு சேவையும் பண பரிவர்த்தனை சந்தையில் 30%-க்கும் அதிகமான பங்கை வகிக்கக்கூடாது என்பதுதான் அது. அப்படி வைத்திருப்பவர்கள் படிப்படியாக இரண்டு ஆண்டிற்குள் அந்த சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது NPCI. அடுத்த வருடம் ஜனவரி முதல் இது நடைமுறைக்கு வரும். இது 40%-க்கும் அதிகமாக மார்க்கெட் ஷேரை வைத்திருக்கும் கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பேடிஎம், வாட்ஸ்அப் பே இதனால் பயன்பெறும் எனத் தெரிகிறது.

2023-ம் ஆண்டுவாக்கில் இந்தப் பரிவர்த்தனையின் மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இன்னும் போட்டி சூடுபிடிக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி!


source https://www.vikatan.com/technology/tech-news/whatsapp-pay-to-start-in-india-after-npci-nod

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக