ஐபோன் SE
சமீபகாலங்களில் ஐபோன் விலை அநியாயத்துக்கு உயர்ந்துவிட்டது என்பதுதான் உண்மை. அதனால் குறைந்த விலையில் நிறைவான வசதிகளுடன் (ஆனால் பழைய டிசைன்) அறிமுகமானது ஐபோன் SE.
ஐபேட் ப்ரோ (2020)
அடுத்து முந்தைய ஐபேட் ப்ரோவின் அதே டிசைனுடன் A12Z சிப்புடன் அறிமுகமானது புதிய ஐபேட் ப்ரோ. இத்துடன் கூடுதலாக இதற்கான மேஜிக் கீபோர்டும் அறிமுகமானது. இது கிட்டத்தட்ட ஐபேடை லேப்டாப்பாகவே மாற்றியது.
மேக்புக் ஏர் (2020)
சில வருடங்களாக மக்கள் விமர்சனத்துக்குள்ளாகி வந்த பட்டர்ஃப்ளை கீபோர்டை இதில் மாற்றியது ஆப்பிள். ஸ்லிம்மாகவும் அதே நேரம் பர்ஃபாமென்ஸிலும் கலக்கியது இந்த வருட மேக்புக் ஏர்.
13-இன்ச் மேக்புக் ப்ரோ(2020)
மேக்புக் ஏர் மட்டுமல்லாமல் ப்ரோ மாடலிலும் பட்டர்ஃப்ளை கீபோர்டை நீக்கி மேஜிக் கீபோர்டு கொடுக்கப்பட்டது. மற்றபடி ஸ்பேக்ஸில் முன்னேற்றங்கள் இருந்தன. டால்பி அட்மாஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டது.
27-இன்ச் ஐமேக்
இந்த மேக் கணினிகளில் டிசைனிலேயே பெரிய மாற்றம் இருக்கும் என்ற தகவ்கள் முதலில் வெளிவந்தன. ஆனால் அப்படி எதுவும் பெரிதாக மாற்றவில்லை ஆப்பிள். ஸ்பெக்ஸில் மட்டும் சிறிய முன்னேற்றங்கள் காணப்பட்டன. புதிதாக 1080p வெப் கேமரா கொடுத்திருந்தார்கள்.
ஐபேட் ஏர் (2020)
சில வருடங்களாகவே எந்த ஒரு மாற்றமும் வராமல் இருந்துவந்த மாடல் 'ஐபேட் ஏர்'. இதற்கு இம்முறை டிசைன் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் புதுப்பொலிவு கொடுத்திருக்கிறார்கள். ஐபேட் ஏர் மூலம் முதல்முறையாக A14 Bionic சிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
ஐபேட் (8th Gen)
எப்போதும் போல பேசிக் ஐபேடுக்கும் கடமைக்கு ஒரு அப்டேட் கொடுத்தது ஆப்பிள். டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. உள்ளே புராசஸரை மட்டும் மாற்றியிருந்தார்கள். ஏழாம் தலைமுறை ஐபேடில் இருந்த A10 fusion சிப்புக்குப் பதிலாக இதில் A12 Bionic சிப் கொடுக்கப்பட்டது.
வாட்ச் சீரிஸ் 6 & வாட்ச் SE
சீரிஸ் 5-ல் இருந்த அம்சங்கள் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. சீரிஸ் 6-ல் சேர்க்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்களுள் ஒன்று ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை கணக்கிடும் SpO2 சென்சார். இத்துடன் பட்ஜெட் மாடலாக வாட்ச் SE-யும் அறிமுகமானது.
ஐபோன் 12 சீரிஸ்
12, 12 மினி, 12 ப்ரோ, 12 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் நான்கு ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் முறையாக 'செராமிக் ஷீல்டு' என்ற டிஸ்ப்ளே பாதுகாப்பை மேலே பயன்படுத்தியிருக்கிறார்கள். புதிய 5 nm A14 பயானிக் சிப் இந்த போன்களில் கொடுக்கப்பட்டன
ஹோம்பாட் மினி
ஆப்பிள் ஹோம் அசிஸ்டென்ட் ஸ்பீக்கரான ஹோம்பாடின் மினி வெர்ஷன் இந்த ஹோம்பாட் மினி. கூகுள், அமேசான் தயாரிப்புகளுக்குப் போட்டியாக இதை களமிறங்கியது ஆப்பிள்.
M1 சிப் பொருத்தப்பட்ட மேக் கணினிகள்
இனி மேக் மேக் கணினிகளும் சொந்த சிப் பயன்படுத்தப்போகிறோம் என்ற ஜூன் மாதம் அறிவித்தது ஆப்பிள். அப்படி மேக் கணினிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் முதல் ஆப்பிள் புராசஸர் சிப் M1. இந்த புதிய சிப் மேக் கணினிகளுக்கு மேம்பட்ட பர்ஃபாமென்ஸையும் அதிக பேட்டரி லைஃப்பையும் தருமாம்.
source https://www.vikatan.com/ampstories/technology/tech-news/apple-rewind-iphone-se-to-m1-macs-all-apple-gadget-released-in-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக