Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

`தி.மு.க-வின் முகத்திரையைக் கிழித்தெறியும் யாத்திரை’ - எல்.முருகன்... தடுத்து நிறுத்திய போலீஸ்!

தமிழக அரசின் தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரையைத் தொடங்கிவைத்த பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் கைதுசெய்யப்பட்டார். அவருடன் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உட்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரும் கைதுசெய்யப்பட்டனர்.

எல்.முருகன்

முன்னதாக வேல் யாத்திரையைத் தொடங்கிவைத்துப் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், ``தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் காலம் காலமாக இந்துக் கடவுள்களுக்கு எதிராகத்தான் பேசிவருகிறார்கள். இந்துக்களை சீண்டுவதும், மத உணர்வைக் கேலி செய்வதும்தான் தி.மு.க-வின் வேலை. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை வழிப்படக்கூடிய கந்த சஷ்டி கவசத்தை ஒரு கயவர் கூட்டம், கறுப்பர் கூட்டம் ஏளனப்படுத்தினார்கள்.

Also Read: `முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொடங்குகிறோம்!’ - திருத்தணிக்குப் புறப்பட்டார் எல்.முருகன்

அந்தக் கறுப்பர் கூட்டத்தைப் பின்னணியிலிருந்து இயக்கியது தி.மு.க. அதுமட்டுமல்ல, நவராத்திரி விரதம் இருந்து வழிபட்ட நம் சகோதரிகளை தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த ஒரு கட்சித் தலைவர் கேவலப்படுத்திப் பேசினார். பட்டியலின மக்களையும் தவறாகப் பேசுகிறார்கள். கஷ்டப்பட்டு படித்து ஹைகோர்ட் நீதிபதியாக ஒருவர் வந்திருப்பார். அது, `நாங்கள் போட்ட பிச்சை' என்று தி.மு.க-வினர் பேசியிருக்கிறார்கள்.

எல்.முருகன்

நம்முடைய பண்பாடு, மொழி, கலாசாரத்தை மட்டுமே கேவலப்படுத்துவதை தி.மு.க அஜெண்டாவாகக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக, இந்த யாத்திரை தி.மு.க-வின் முகத்திரையைக் கிழித்தெறியும். ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. கடைசிவரை நிறைவேறாது. இந்த யாத்திரையோடு ஸ்டாலினின் முதல்வர் கனவும் கனவாகவே போயிடும். வரும் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியில் அமரப்போகிறது" என்றார்.

Also Read: “முருகன் யாருக்குச் சொந்தம்?”

எல். முருகன் கைது
எல். முருகன் கைது
எல். முருகன் கைது
எல். முருகன் கைது

இதைத் தொடர்ந்து வேல் யாத்திரையைத் தடுத்து நிறுத்திய போலீஸார், எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க-வினரைக் கைதுசெய்தனர். தடையை மீறிய வேல் யாத்திரை அறிவிப்பால் காலை முதலே திருத்தணியில் அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து பரபரப்பு நிலவிவந்த நிலையில், கைது சம்பவத்தின் மூலம் பரபரப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/bjp-cadres-including-l-murugan-arrested-in-thiruththani-over-vel-yatra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக