நேபாள நாட்டின் டோனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது பற்றி அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள நாட்டின் மேற்கே டோனி மாவட்டத்தில் நேற்றிரவு 9:07 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9:56 மணியளவில் 4.1 என்ற ரிட்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும், இன்று அதிகாலை 2:12 மணியளவில் 6.3 என்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடிருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் டோனி மாவட்டத்தில் உள்ள வீடு இடிந்து ஆறு பேர் உயிரிழந்தனர். நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தின் தென்கிழக்கு 90 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் கொண்டிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் டெல்லி, குருகிராம், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் அச்சத்தில் சாலையில் குவிந்தனர்.
source https://www.vikatan.com/news/general-news/6-killed-as-63-magnitude-earthquake-hits-nepal-strong-tremors-felt-in-delhi-neighbouring-areas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக