Ad

செவ்வாய், 8 நவம்பர், 2022

`ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு சாவு மணி’ - ஜனாதிபதிக்கு திமுக கூட்டணி கட்சிகள் சொன்ன 14 பாயின்ட்ஸ்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமிடையே பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்வுகளில், புதிய கல்விக் கொள்கை, திருக்குறள், சனாதனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருவதற்கு தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

கடந்த 23-ம் தேதியன்று நடந்த கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து ‘கோவை வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு வழங்கியதில் ஏன் இந்த கால தாமதம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஆளுநர். இதற்கு தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ‘என்ன குறை கண்டார் ஆளுநர்?’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது.

``தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், அவர் தனது பதவியைவிட்டு விலகி கருத்துகளைச் சொல்லட்டும்" என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிக்கை விட்டிருந்த நிலையில், தி.மு.க எம்.பி, டி.ஆர்.பாலு, “திமுக மற்றும் அதனுடன் ஒத்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட வேண்டும்” என்று கடிதம் எழுதியிருந்தார். இதன்படி எம்.பி-க்கள் பலரும் கையெழுத்திட்டனர்.

கூட்டணி கட்சிகளுடன்

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றருந்தார். தமிழகத்தில் ஆளும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்ட நிலையில், ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் தரப்பு, “இது வழக்கமான மீட்டிங்தான். ஓர் அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தார், அவ்வளவுதான்” என்றார்கள்.

இந்த நிலையில், ஆளுநரை திரும்ப பெற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக் கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ள 14 புள்ளிகள் பின்வருமாறு

குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்
குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம்


source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-summited-letter-to-president-draupadi-murmu-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக