Ad

வியாழன், 9 ஜூன், 2022

``பேரழிவை உருவாக்கும் பேச்சு; பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" - மம்தா பானர்ஜி காட்டம்

பா.ஜ.க நிர்வாகிகளான நுபுர் ஷர்மாவும், நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகம் குறித்துத் தெரிவித்த சர்ச்சைக் கருத்துகள், உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மாவும், நவீன் ஜிண்டாலும் கைது செய்யப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பேரழிவை உருவாக்கக்கூடிய பா.ஜ.க தலைவர்களின் சமீபத்திய வெறுப்பு பேச்சுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய வெறுப்புப் பேச்சுகளின் விளைவாக வன்முறை பரவுவது மட்டுமல்லாமல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் நாட்டின் கட்டமைப்பையும் பிளவுபடுகிறது.

நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கவும் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வெறுப்புப் பேச்சை வன்மையாகக் கண்டிக்கும் அதே நேரத்தில் பா.ஜ.க தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், சாமானிய மக்களின் நலனுக்காக அமைதியைப் பேணுமாறு அனைத்து சமூகங்களைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/the-accused-leaders-of-bjp-has-to-be-arrested-immediately-says-mamta-banarjee

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக