வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் மற்றும் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் ஆகியவை சாா்பில், பாலாறு பெருவிழா இன்று தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழா குறித்து, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கப் பொதுச்செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் வேலூரில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நதிகளைப் பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழகத்தில் ஏற்கெனவே காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆகிய நதிகளுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக, பாலாறு நதிக்குப் பெருவிழா நடத்தப்படுகிறது.
இந்த விழா இன்று (புதன்கிழமை) (ஜூன்-29) தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவைத் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தொடக்கி வைக்கவும், முதல்வா் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, புதுச்சேரி ஆளுநா் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை விழா நடைபெறும். முதல் நாள் நிகழ்வில் தேசிய அளவில் உள்ள சந்நியாசிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. 2-ம் நாள் நிகழ்வில் தமிழகத்தின் துறவிகள், ஆதீனங்கள் பங்கேற்கும் மாநாடும், மூன்றாம் நாள் நிகழ்வில் தென்துறவிகள் பங்கேற்கும் மாநாடும், 4-ம் நாள் நிகழ்வில் பசு, நீா்நிலைகள் பாதுகாப்பு மாநாடும், 5-ம் நிகழ்வில் கிராமக் கோயில் பூசாரிகள் பங்கேற்கும் மாநாடும் நடைபெறுகிறது.
இந்த 5 நாள்களும் காலை நிகழ்ச்சிகளும், மாலையில் பாலாற்றில் ஆரத்தி நிகழ்வும் நடைபெறும். இந்த விழாக்கள் மூலம் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நதிகளை தேசிய மயமாக்கி இணைக்க வேண்டும். கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. விழாவில் நாடு முழுவதுமிருந்து ஆயிரம் துறவிகள், அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்க விருப்பதாகத்’’ தெரிவித்தார்.
source https://www.vikatan.com/spiritual/news/palar-festival-in-vellore-starting-tomorrow-and-going-on-for-next-5-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக