Ad

புதன், 15 ஜூன், 2022

`ஊரைவிட்டு எங்கும் போகக்கூடாது!' -பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு `செக்'

பெரம்பலூர் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த குமரிமன்னன் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சி ஆணையராக டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். ஆனால் குமரிமன்னன் அங்கு டிரான்ஸ்பரில் செல்லவில்லை. இந்நிலையில், அவர் மீது சில முறைகேடு புகார்கள் இருந்து வந்ததால்... அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு நாள்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெரம்பலூர் நகராட்சி

இந்நிலையில், ஆணையர் குமரிமன்னன் பெரம்பலூரிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும், உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் பெரம்பலூரை விட்டு வெளியூருக்குச் செல்லக் கூடாது என்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார். இவர், பெரம்பலூர் நகராட்சியில் ஆணையராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் உயரதிகாரிகளுக்கு பறந்தன.

ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்

இதனால், அது குறித்து விசாரிக்க ஆறுபேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து நகராட்சி இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டிருக்கிறார். இந்த விசாரணைக் குழுவினர் நேற்று பெரம்பலூர் வந்தனர். அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு காலை முதல் மாலை வரை ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

நகராட்சி ஆணையர் குமரிமன்னன்

இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட குமரிமன்னன் விசாரணை செய்யும் குழு முன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை என்றும், மீண்டும் பெரம்பலூரில் பணியை தொடர்வதற்காக தேவையான வேலைகளை செய்து வருவதாகாக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/perambalur-municipality-commissioner-suspended-after-numerous-complaints

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக