Ad

ஞாயிறு, 26 ஜூன், 2022

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் அதிக ப்ளீடிங்... டி அண்ட் சி செய்வது சரியானதா?

எனக்கு வயது 38. மாதவிலக்கின்போது ரத்தம் கட்டிகளாக வெளியேறுகிறது. அதிக ப்ளீடிங்கும் இருக்கிறது. மருத்துவரை அணுகியபோது கர்ப்பப்பையின் சுவர் திக்காக இருப்பதாகவும், அதற்கு டி அண்ட் சி செய்ய வேண்டும் என்றும் சொன்னார். டி அண்ட் சி செய்துகொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? அதனால் கர்ப்பப்பைக்கு பாதிப்பு வராதா? அப்படி டி அண்ட் சி செய்துவிட்டாலே கட்டிகளாக ரத்தம் வெளியேறுவது நின்றுவிடுமா?

மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்...

கட்டிகட்டிகளாக ரத்தம் வெளியேறும் நிலையில், டி அண்ட் சி செய்வது நல்லதுதான். டி அண்ட் சி செய்வதால் கர்ப்பப்பைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கர்ப்பப்பையின் உள்வரி சவ்வானது (எண்டோமெட்ரியம்) திக்காக இருப்பதற்கு, பெரும்பாலும் ஹார்மோன் பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும்.

Periods

பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்கும், மெனோபாஸுக்கு முன்பும் ஹார்மோன் மாறுபாடுகளால் எண்டோமெட்ரியம் சவ்வானது திக்காகி, ப்ளீடிங் அதிகமாக இருக்கவும், இப்படி கட்டிக்கட்டிகளாக வெளியேறவும் வாய்ப்புகள் அதிகம்.

ஒருமுறை டி அண்ட் சி செய்துவிட்டால், அடுத்து இனிமேல் அதிகப்படியான உதிரப்போக்கே இருக்காது என்றோ, கட்டிகளாக வெளியேறாது என்றோ அர்த்தமில்லை. இம்முறை உங்கள் மருத்துவர் சொன்னபடி டி அண்ட் சி செய்து கொள்ளலாம்.

Menopause

ஆனால் உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான ரத்தப் போக்குக்கும், கட்டிகளாக வெளியேறுவதற்கும் என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும். எனவே அது பற்றி மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/is-it-advisable-to-get-dc-treatment-for-excessive-bleeding

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக