Ad

வெள்ளி, 17 ஜூன், 2022

அக்னிபத் திட்டம்: தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு... நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிப்பு!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14-ம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான `அக்னிபத்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டதுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில் நேற்று பீகாரில் போராட்டக்காரர்கள் சாலைமறியல், ரயில்மறியலில் ஈடுபட்டதால் போராட்டம் தீவிரமடைந்தது. பீகாரில் ரயில்களில் தீ வைத்ததற்காக 16 போராட்டக்காரர்களை போலீஸார் கைதுசெய்து, அடையாளம் தெரியாத 650 பேர்மீது நேற்று வழக்கு பதிவுசெய்தனர்.

செகந்தரபாத் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைப்பு

இதன் தொடர்சசியாக இன்றும் உத்தரபிரதேசம், பீகார், தெலங்கானாவில் ரயில்கள் தாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் செகந்தராபாத் ரயில் நிலையத்திலும் ரயிலுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை வீசி போராட்டம் நடத்திவருகின்றனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை சுட்டதில் ஒருவருக்கு முழங்காலுக்கு கீழே காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையைக் கண்காணித்துவருகின்றனர்.

மேலும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், 13 ரயில் சேவைகள் நிறுத்திவைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



source https://www.vikatan.com/news/politics/200-train-services-affected-due-to-agnipath-scheme-protests

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக