கந்து வட்டிக் கொடுமைகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து `ஆபரேஷன் கந்துவட்டி' என்ற அதிரடி நடவடிக்கையைத் தமிழகக் காவல்துறை 8.6.2022 முதல் முன்னெடுத்துவருகிறது. இந்த நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், " ந்துவட்டியால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை `ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற அதிரடி நடவடிக்கைகளை 8.6.2022 முதல் எடுத்து வருகிறது. இதில், கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு காவல்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் தமிழ்நாடு முழுவதும் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டது. அதில் 89 புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 32 கந்துவட்டி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
22 குற்றவாளிகளின் வீடுகளிலிருந்து 40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களான பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுகள், கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் 6 வழக்குகள், மற்றும் சேலம் மாநகரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வசூலிப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1957-ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தின்படி, எவரொருவர் பிரிவு 3-ன் கீழ் உத்தரவாதத்தை மீறினாலோ, அல்லது கடன் தொகையை வசூல் செய்ய எவரேனும் கடனாளியைத் தொந்தரவு அல்லது தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்தாலோ, மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/crime/complaints-of-vested-interest-in-the-last-one-year-tamil-nadu-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக