Ad

புதன், 22 ஜூன், 2022

Live: அதிமுக பொதுக்குழு... விடிய விடிய நடந்த விசாரணையில் ட்விஸ்ட் - ஓ.பி.எஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

``இது பின்னடைவு கிடையாது” - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான உத்தரவுக்குப் பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். இது அதிமுக-வுக்கு பின்னடைவு கிடையாது. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவெடுக்கும்” என்றார்.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஏற்பாடுகள் தயார்.... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் -ஒரு புகைப்படத் தொகுப்பு

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஏற்பாடுகள் தயார்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஏற்பாடுகள் தயார்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஏற்பாடுகள் தயார்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஏற்பாடுகள் தயார்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

`பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பார்’

வைத்திலிங்கம்

மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை அடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிபதிகள் எந்த தடையும் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பார்” என்றார்

பன்னீர்செல்வம் தரப்பு கொண்டாட்டம்!

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்றது. விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கூடுதலாக, பொதுக்குழுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர். அந்த 23 தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார். இதனை எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தனர்.

எடப்பாடி - பன்னீர்

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/live-updates-on-aiadmk-general-body-meeting-ops-vs-eps

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக