கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஒரு காலத்தில் கூட்டணிக் கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் ஜே.டி(எஸ்) கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் ஜே.டி(எஸ்) எம்.எல்.ஏ-வான கே. சீனிவாச கவுடா, ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்.
மேலும் அவர், "தான் காங்கிரஸை நேசிப்பதால்தான் அந்த கட்சிக்கு வாக்களித்தேன்" எனக் கூறினார். இதற்கு முன்னதாக, சில ஜே.டி(எஸ்) சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக சித்தராமையா கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தனது கட்சியின் எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கட்டாயப்படுத்தியதாக ஜே.டி(எஸ்) தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,"சீனிவாச கவுடா காங்கிரஸுக்கு வாக்களிப்பார் என்று கூறியிருந்தேன்.
ஆனால் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் கூட ஜே.டி.எஸ்-க்கு வாக்களிக்கவில்லை. காங்கிரஸ் இன்று தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறது. காங்கிரஸ்தான் பாஜகவின் 'பி' டீம். அவர்கள்தான் பிரதானம். நாட்டில் பா.ஜ.க,வின் எழுச்சிக்குக் காங்கிரஸ்தான் காரணம்" எனக் கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/politics/congress-is-the-b-team-of-bjp-says-kumaraswamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக