Wordle உலகம் முழுவதும் வைரலாகி வரும் வார்த்தை விளையாட்டு. ஒவ்வொரு நாளும் அன்றைக்கான புதிர் வார்த்தையை Wordle விளையாட்டில் கண்டுபிடிப்பது ஒரு நாளின் வழக்கமான பணிகளில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறது. இந்த விளையாட்டு ஒரு வயதான மூதாட்டியைப் பிணையில் இருந்து மீட்க உதவியிருக்கிறது என்றால் நம்புவீர்களா?
சிகாகோ மாகாணத்தில் வசித்து வரும் 80 வயதான டென்ஸி கோல்ட் தங்கியிருந்த வீட்டில் பிப்ரவரி 5 ஆம் தேதி, ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் வெற்றுடலுடன் அத்துமீறி உள்நுழைந்திருக்கிறார். கத்திரிக்கோலைக் காட்டி மிரட்டியதாகவும் அவரோடு குளிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் டென்ஸி தெரிவிக்கிறார். வேறு எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை எனினும், ஜன்னல்கள் அடைக்கப்பட்ட கீழ்தளத்தில் இருக்கும் குளியலறையில் டென்ஸியை அடைத்து வைத்திருக்கிறார் அந்த நபர்.
டென்ஸியின் மகள் மெரிடித். சீயாட்டலில் வசிக்கும் இவருக்கு ஒருபோதும் அன்றைக்கான Wordle புதிருக்கான விடையை அனுப்ப டென்ஸி தவறியதில்லையாம். அன்றைக்கு மகள் அனுப்பிய குறுந்செய்திகளுக்கு பதில் கிடைக்காததாலும், Wordle புதிருக்கான விடையை டென்ஸி அனுப்பாததாலும் சந்தேகம் அடைந்த மெரிடித், காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார். தகவல் கிடைத்து வந்த காவலர்கள், 32 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து டென்ஸியை மீட்டனர்.
17 மணி நேர பிணைக்கு பிறகு வெளியே வந்த டென்ஸி, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. "நான் மீண்டும் உயிருடன் வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியில் இருந்தேன். உயிர்பிழைக்க போராடினேன்" என்கிறார். Wordle பலரின் நாளை நல்ல மனநிலையில் தொடங்கவும் பதற்றத்திலிருந்து விடுவிக்கவும் மட்டுமில்லாது உயிரைக் காக்கவும் உதவியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/international/wordle-game-helps-to-rescue-an-80-year-old-woman-from-a-mentally-challenged-man-in-chicago
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக