எங்கிருந்தோ வந்த நவீன வைத்திய முறைகளை நம்பும் நாம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் சித்தர் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த அரிய வர்ம வைத்தியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. மருந்தில்லா இந்த அற்புத சிகிச்சை முறையைப் பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நம் பாரம்பர்ய வைத்தியர்களின் கனவாக உள்ளது. சித்தர்களின் மரபில் 'வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம்' என்று பொருள். உடலெங்கும் பரவியுள்ள வர்மப் புள்ளிகள்தான் மனித உடலை இயக்குகின்றன. இவையே மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை பாதிக்கப்படுகின்றன. வேறெந்த மருத்துவ உத்திகளிலும் இல்லாத அதிசயங்கள் வர்ம வைத்தியத்தில் உண்டு. ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, ஆர்த்ரைடிஸ், மூட்டு நழுவல், நீரிழிவு, தூக்கமின்மை, மன அழுத்தம், கருப்பை மற்றும் மாதவிலக்கு பிரச்னை, சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை வர்ம சிகிச்சையால் குணப்படுத்திவிட இயலும். உடலெங்கும் பயணிக்கும் இந்த வர்ம ஆற்றல் காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்தவோட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் ஒழுங்கு செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது. வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள் யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
வர்மக்கலையின் நோக்கமே, மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது, கூடுமானவரை நோய்களை வரவைக்காமலும், வந்தால் எளிய முறையில் சரி செய்து கொள்ள வைப்பதுமே ஆகும். இதனால் அபரிமிதமான மருத்துவ செலவைக் குறைக்கலாம். நோயற்ற வாழ்வால் திறனை அதிகரித்து வாழ்வில் முன்னேறலாம். அதுமட்டுமா... நமக்குப் பின்வரும் சந்ததிகளை பாரம்பர்யமான நமது வைத்திய முறைக்கு அழைத்துச் செல்லலாம்.
எங்கிருந்தோ வந்த நவீன வைத்திய முறைகளை நம்பும் நாம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் சித்தர் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த அரிய வர்ம வைத்தியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. மருந்தில்லா இந்த அற்புத சிகிச்சை முறையை பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நம் பாரம்பர்ய வைத்தியர்களின் கனவாக உள்ளது.
Also Read: மருந்தில்லா மருத்துவம்... வர்மப் புள்ளி வைத்திய முறை... வியக்கவைக்கும் உள்ளங்கை விதை சிகிச்சை!
அதன்படிவர்மப் புள்ளி வைத்திய முறையை உங்களுக்குப் பயிற்றுவிக்க வருகிறார்கள் வர்ம வைத்திய முறை ஆசான் கம்பம் பாண்டியராஜன் மற்றும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத் தலைவர் மு. அரி. தமிழகத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் சித்தர்கள் அருளிய இந்த வர்ம சிகிச்சையான உள்ளங்கை விதை சிகிச்சை குறித்து வாசகர்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என்று சக்திவிகடன் இந்தப் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களின் கவனத்துக்கு...
சக்தி விகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் எளிய வர்மப்புள்ளி வைத்திய விளக்க வகுப்பு, வரும் 15.11.2020 ஞாயிறன்று (காலை 7 முதல் 8:30 மணி வரை) ஆன்லைன் வகுப்பாக நடைபெறும் (முன்பதிவு கட்டணம் ரூ.500).
இந்த வகுப்பு, பாரம்பர்யமான வர்மப்புள்ளி வைத்தியத்தின் சிறப்புகள் குறித்த தகவல் அறிதலுக்காக மட்டுமே.
இந்த சிகிச்சை முறைகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சிகிச்சை முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு:
73974 30999; 97909 90404
Date: நவம்பர் 15, 2020 | Time: காலை 7.00- 8.30
இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/spiritual/news/sakthi-vikatan-online-event-on-the-benefits-of-varma-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக