ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த டாக்டர் கவ்லா அல் ரோமைதி 3 நாள்கள், 14 மணி நேரம், 46 நிமிடங்கள், 48 விநாடிகளில் ஏழு கண்டங்களுக்குப் பயணித்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.
13.2.2020 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது சாதனை பயணத்தை முடித்த அல் ரோமைதி, இந்த அதி வேகமான பயணத்தில் 208 நாடுகளையும் அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, ``UAE சுமார் 200 வெவ்வேறு தேசிய இனங்களைக் கொண்டது. நான் அவர்களின் நாடுகளுக்கெல்லாம் சென்று அவர்களின் கலாசாரங்களைப் பற்றி அறிய விரும்பினேன். இது ஒரு கடினமான பயணம். என் குடும்பத்தினரும் நண்பர்களும்தான் என்னை ஊக்கப்படுத்தினர்." என்றிருக்கிறார்.
மேலும், ``கின்னஸ் உலக சாதனை பட்டத்தை என் நாட்டுக்கும் சமூகத்துக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனது சாதனை பலருக்கும் உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/ampstories/news/women/uae-woman-sets-world-record-by-travelled-all-seven-continents-in-just-three-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக