சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நாளில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஜே ஆஸ்டின் (Lloyd J Austin), சீனாவின் பிராந்தியம் உரிமைகோரல்களை விரிவுபடுத்துவது குறித்துப் பேசும்போது, "பி.ஆர்.சி (சீன மக்கள் குடியரசு) அதன் பிராந்திய உரிமைகோரல்களுக்கு மிகவும் வலுக்கட்டாயமான ஆக்கிரமிப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால், இப்பொது இது தொடர்பாகப் பேசவேண்டியது மிகவும் முக்கியமானது.
கிழக்கு சீனக் கடலில், சீனாவின் விரிவடைந்து வரும் கடற்படை அதன் அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தைத் தூண்டுகிறது. தென் சீனக் கடலில், பி.ஆர்.சி தனது சட்டவிரோத கடல்சார் உரிமைகோரல்களைப் பலப்படுத்த, மனிதனால் உருவாக்கப்பட்ட தீவுகளில் ஆயுதங்களுடன் கூடிய புறக்காவல் நிலையங்களைப் பயன்படுத்துகிறது.
பி.ஆர்.சி கப்பல்கள், பிராந்தியத்தின் விதிகளை மீறுவதையும், மற்ற இந்தோ-பசிபிக் நாடுகள் பிராந்தியத்தின் எல்லைக்குள் சட்டவிரோதமாகச் செயல்படுவதையும் நாங்கள் காண்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வளர்ந்து வரும் இராணுவத் திறன் மற்றும் தொழில்நுட்ப வலிமை ஒரு பலமான சக்தியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு முன் ஜூன் 8 -ம் தேதி, அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் கமாண்டிங் ஜெனரல் சார்லஸ் ஏ.ஃபிளின் (General Charles A. Flynn)இந்தியாவுக்கு வந்தபோது, "லடாக்கில் இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் சீனாவால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகள் இந்தியாவுக்கு மிக அபாயகரமானது" என எச்சரித்தார். அதைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் இரண்டாவது முறை அமெரிக்க அதிகாரிகள் சீனா இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவுகிறது என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/international/china-continuing-to-harden-its-position-along-borders-with-india-says-america
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக