Ad

திங்கள், 13 டிசம்பர், 2021

IPO வெளியிடும் PharmEasy; எதிர்க்கும் வர்த்தகர்கள் சங்கம்; என்ன காரணம்?

மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்துவரும் பார்ம்ஈஸி நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.6,250 கோடி நிதித் திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் விற்பனை தளத்தில் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என 2018-ல் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி பார்ம்ஈஸி நிறுவனம் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்துவருகிறது. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐ.பி.ஓ

Also Read: அடுத்தடுத்து வரும் IPO-க்கள்; நம்பி பணம் போடலாமா? - Equinomics G.Chokkalingam Explains

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது பங்குச் சந்தையில் பொதுப் பங்கு விற்பனையை நடத்த அனுமதி கோரி சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பித்துள்ளது.

இதையடுத்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சி.ஏ.ஐ.டி அமைப்பு பார்ம்ஈஸி ஐ.பி.ஓ.வுக்கு அனுமதி வழங்கக் கூடாது என செபிக்கு கடிதம் எழுதியுள்ளது.

அக்கடிதத்தில், `பார்ம்ஈஸி நிறுவனத்தின் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதன் ஐ.பி.ஓ நடவடிக்கைக்கு அனுமதி வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அது முதலீட்டாளர்களின் முதலீடுகளைப் பாதிக்கும். எனவே, அதன் ஐ.பி.ஓ விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளது.

பார்ம்ஈஸிக்கு எதிராக இப்போது அல்ல இதற்கு முன்பே பலமுறை எதிர்ப்பு எழுந்துள்ளது. மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம் 1940-ன் படி மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான எந்த விதிமுறைகளும் இல்லை.

ஐ.பி.ஓ

Also Read: IPO திருவிழா... முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! | Startup IPO | Nanayam Vikatan

எனவே, ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், எதையும் மதிக்காமல் பார்ம்ஈஸி போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதோடு, தொடர்ந்து தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்களையும் செய்துவருகிறது. தற்போது அடுத்தகட்டமாக ஐ.பி.ஓ வெளியிட்டு நிதித் திரட்டவும் தயாராகியிருக்கிறது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில் சரியான தெளிவு ஏற்படும்வரை ஐ.பி.ஓ-வுக்கு ஒப்புதல் தரக்கூடாது.

அப்படி வழங்கினால் பல லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் முதலீடு ஆபத்துக்குள்ளாகும்.



source https://www.vikatan.com/business/share-market/cait-urges-sebi-to-reject-pharmeasy-s-ipo-request

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக