Ad

திங்கள், 13 டிசம்பர், 2021

விதிகளை மீறிய இரண்டு பார்ட்டிகள்?! கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கிறது. எனவே பொது மக்கள் கொரோனா விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் அதனைக் கண்டுகொள்ளாமல் பலரும் பார்ட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். பார்டிகளில் கலந்துகொண்டதன் காரணமாக பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளளர் ட்விட்டர் செய்தியில், `நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோர் கொரோனா விதிகளைமீறி அடுத்தடுத்து பார்ட்டிகளில் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அம்ரிதா அரோரா, கரீனா கபூர்

கரீனா கபூர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அம்ரிதா தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டாரா என்று உறுதிபடுத்தப்படவில்லை. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளவேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கரீனா கபூர் வீட்டிற்கும் மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள். சமீபத்தில் நடிகை ரியா கபூர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பார்ட்டியில் கரீனா கபூர், அம்ரிதா அரோரா, மலைகா அரோரா, கரிஷ்மா கபூர் உட்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பிறகு கரீனா கபூர் இது குறித்து சமூக வலைத்தளத்திலும் பார்ட்டியை வெகுவாக புகழ்ந்திருந்தார். அதோடு இயக்குனர் கரண் ஜோகர் தனது முதல் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதையொட்டி தனது வீட்டில் சிறப்பு பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதிலும் கரீனா கபூர், மலைகா அரோரா, அம்ரிதா, அலியா பட், அர்ஜூன் கபூர், கரிஷ்மா கபூர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சீமா கான் என்பவருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கரீனா கபூர் தானே சென்று கொரோனா சோதனை செய்து கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.



source https://cinema.vikatan.com/bollywood/actress-kareena-kapoor-amrita-arora-get-corona-infection-after-attending-consecutive-parties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக