தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட 101 வருட பழமையான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிய பங்கு வெளியிட (ஐபிஓ) உள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.1000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை செபி அமைப்பிடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிதாக 1.58 கோடி பங்குகளையும், ஏற்கெனவே முதலீட்டாளர்கள் வசம் உள்ள 12,505 பங்குகளையும் பொதுப் பங்கு வெளியீட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவை செபியிடம் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பித்த நிலையில், தற்போது செபியின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
டி.பிரேம் பழனிவேல், பிரியா ராஜன், பிரபாகர் மஹாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம்.மல்லிகா ராணி, மற்றும் சுப்ரமணியன் வெங்கடேசன் ஐயர் ஆகியோர் தங்கள் வசமுள்ள பங்குகளை 'ஆஃபர் ஃபார் சேல்' முறையில் விற்பனை செய்ய உள்ளனர்.
விரைவில் ஐபிஓ வெளியீடு குறித்த விவரங்கள் வெளியாகும். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அனைத்து விதமான நிதி சார் சேவைகளையும் பல ஆண்டுகளாக மக்களுக்குச் சிறப்பாக வழங்கிவருகிறது.
சிறு, குறு தொழில் கடன் முதல், வேளாண் கடன், சில்லறை வர்த்தக கடன் ஆகிய சேவைகளை வழங்கிவருகிறது.509 கிளைகள், இவற்றில் கிராமப் பகுதிகளில் இயங்குபவை 106 கிளைகள் ஆகும். 12 மண்டல அலுவலகங்கள் நாடு முழுவதும் உள்ளன. 49 லட்சம் வாடிகையாளர்கள் இந்த வங்கியில் உள்ளனர். இதனால் ஐபிஓ வெளியீடு மீது முதலீட்டாளர்கள் கவனம் குவிந்துள்ளது.
source https://www.vikatan.com/business/finance/sebi-gives-nod-for-tamilnad-mercantile-bank-ipo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக