மலையாள சினிமா இயக்குநர் அலி அக்பர் முஸ்லிம் மதத்தில் இருந்து விலகி இந்துவாக மதம் மாறியிருக்கிறார். அவர் கடந்த எட்டு ஆண்டுகளாக அரசியல் ரீதியாக பா.ஜ.க-வில் இருக்கிறார். ஆனாலும் அவர் முஸ்லிமாகவே இருந்தார். இந்த நிலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு மதம் மாறியவர் அலி அக்பர் என்ற தனது பெயரை ராம சிம்ஹன் என மாற்றியுள்ளார். முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்ததற்காக இரங்கல் பதிவு போட்டிருந்தார் அலி அக்பர். அந்த பதிவுக்கு கீழே பலர் சிரிக்கும் எமோஜிகளை போட்டிருந்தனர். இதையடுத்து ஃபேஸ்புக் வீடியோவில் பேசிய அலி அக்பர், ``சிரிப்பு எமோஜிகளை ஆயிரக்கணக்கில் போட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும்,ஏஇமோஜி பதிவிட்டதற்கு அமைதிகாத்த முஸ்லிம்களின் மதத்தை நான் விட்டுவிட்டேன்" என ஆவேசமாகப் பேசியிருந்தார். அவரின் மனைவியும் இந்துவாக மதம் மாறிவிட்டதாகவும், அவரின் பிள்ளைகள் வளர்ந்தபிறகு முடிவு செய்துகொள்ளட்டும் என விட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மலையாளத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் அலி அக்பர் முஸ்லிமில் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"நம் நாட்டின் பொதுச்சொத்தான முப்படை தளபதியின் மரணச் செய்தியை கேட்டபோதே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி வந்த கொஞ்சம் நேரத்திலேயே ஆயிரக்கணக்கான சிரிப்பு எமோஜிகளும், மோசமாக பரிகசிக்கும் பதிவுகளையும் கண்டேன். சமாதானத்தையும், ஒற்றுமையையும் பரப்பும் மதம் எனக்கூறும் அதில் உள்ள ஒருத்தர்கூட இதற்கு எதிராக பேசவில்லை என்பதுதான் துக்ககரமானது. எனக்கு நாடுதான் மிக முக்கியம், அதற்கு பிறகுதான் மதம்" எனக் கூறும் அலி அக்பர் தனது புதிய பெயருக்கான காரணங்களையும் விளக்குகிறார்.
"கேரளத்தில் தர்மத்தின் வழியில் நடந்ததால் கொலைச் செய்யப்பட்ட ராமசிம்ஹனை மறந்திருக்கமாட்டீர்கள். 1947-ல் சுதந்திரத்துக்கு சற்று முன்பு மத மன நோயாளிகளால் குடும்பத்துடன் வெட்டி கொல்லப்பட்ட ராம சிம்ஹனின் பெயரை நான் ஏற்றெடுத்துள்ளேன். நான் இந்து மதத்துக்கு மாறியுள்ளேன் என்பது சரியல்ல, சனாதன தர்மத்திற்கு மாறியுள்ளேன் என்பதுதான் சரி. முஸ்லிம் என்பது மதம், எனவே மதத்தை விட்டுவிட்டேன். மதம் இல்லாத ஒரு சம்ஸ்காரத்துக்கு நான் மாறியுள்ளேன். அப்படி மாறியுள்ளதால் நான் எல்லாரையும் ஒன்றாக பார்க்க முடியும்.
சனாதன தர்மத்தில் நான் சூத்திரனாக இருக்கிறேன். நாம் செய்யும் வேலையின் அடிப்படையில்தான் ஜாதி தீர்மானிக்கப்படும். எனவே நான் செய்வது சேவனம்(பணி). சேவனம் என்பது சூத்திர கர்மம். சில நேரங்களில் நான் சத்திரியனாகவும் மாறிவிடுகிறேன். நான் நல்ல போராட்டக்காரனாகவும் இருக்கிறேன். கிருஷ்ணர் ஆட்டு இடையனாக இருந்த சமயத்தில் சூத்திரனாக இருந்தார். அர்ஜூனனுக்கு உபதேசம் கொடுக்கும்போது பிராமணனாக மாறினார். ஆயுதம் எடுக்கும்போது சத்திரியனாக மாறினார். எனவே கர்மத்தை வைத்துதான் வர்ணம் (ஜாதி) முடிவு செய்யப்படுகிறது. ஜாதி, மதம் என்பது குலங்களாகும். எல்லா வட்டங்களில் இருந்தும் நான் வெளியே வந்துவிட்டேன்" என்கிறார் ராம சிம்ஹன் என பெயரை மாற்றிக்கொண்ட இயக்குநர் அலி அக்பர்.
source https://www.vikatan.com/oddities/miscellaneous/kerala-cinema-director-ali-akbars-statement-regarding-his-new-name
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக