திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறித்துவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், கே.சி வீரமணி, சி. விஜயபாஸ்கர். எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி இருந்தது. இந்த நிலையில் 5-வது அதிமுக முன்னாள் அமைச்சராக தங்கமணி தொடர்புடைய இடங்கள், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாறை தங்கமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மட்டுமின்றி வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி தொடர்பாக கர்நாடகாவில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் சிலரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தங்கமணி மகன் தரணிதரன், மனைவி சாந்தி மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது, கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளார் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/raid-by-vigilance-department-in-former-minister-thangamani-house-and-properties
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக