Ad

செவ்வாய், 9 நவம்பர், 2021

நாமக்கல்: `உன் வீட்டை எழுதி தா..' - மீட்டர் வட்டி கேட்டு மளிகை கடை, வீட்டை சூறையாடிய கும்பல்

மீட்டர் வட்டி கேட்டு, மளிகை கடை மற்றும் வீட்டை 15 பேர் அடங்கிய கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம், நாமக்கல் மக்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அப்படி, அடித்து நொறுக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடித்து நொறுக்கப்பட்ட வீடு

Also Read: நாமக்கல்: கிணற்றில் தவறி விழுந்த பசு; மீட்க குதித்த விவசாயிக்கு நேர்ந்த துயரம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன், வயது 50. இந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் முதல் மனைவி மல்லிகா. இவர்களுக்கு பாலாஜி என்ற மகனும் இருந்தார். குடும்பத்தகராறு காரணமாக ஜெகநாதன் மல்லிகாவை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு, இரண்டாவதாக சந்திரா (வயது:46) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு 10 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ஜெகநாதனின் முதல் மனைவிக்கு பிறந்த பாலாஜி கடந்த 2018 ஆம் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவரிடம் ரூபாய் ஒரு லட்சம் கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட வீடு

அப்படி கடன் பெற்ற பாலாஜி கடந்த 2019 - ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இந்த சூழலுல், கடந்த சில மாதங்களாக அன்பரசன், பாலாஜி தன்னிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீட்டர் வட்டி போட்டு, 'மொத்தம் நான்கு லட்சம் ரூபாயை திருப்பி கொடு, இல்லையென்றால் வீட்டை எழுதி தா' என்று ஜெகநாதனிடம் கேட்டுள்ளார்.

Also Read: அதிக வட்டி ஆசை காட்டி 12,000 பேரை ஏமாற்றிய மதுரை நிதி நிறுவனம்; பின்னணியில் ரவுடி கும்பல்?

இதற்கு, ஜெகநாதன் மறுத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 15 - க்கும் மேற்பட்டவர்கள், ஜெகநாதன் மளிகை கடையை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. மேலும், கற்களை கொண்டு அவரின் ஓட்டு வீட்டையும் அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது. அதோடு, அங்கே அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், ஜெகநாதனின் இரண்டாவது மனைவி சந்திராவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சந்திரா

தற்போது அவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக, ராசிபுரம் காவல்நிலைய போலீஸார், அன்பரசன், அவரின் தம்பி அய்யனார், கூலிப்படையைச் சேர்ந்த அஜித், வெங்கடாசலம், பவுன்ராஜ், சதீஸ்குமார் உள்ளிட்ட ஆறு நபர்களை கைது செய்துள்ளனர். தலைமலைவாக இருக்கும் கூலிப்படையை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர். மீட்டர் வட்டி கேட்டு, வீட்டையும், மளிகை கடையையும் அடித்து நொறுக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/in-namakkal-home-shop-was-damaged-in-debt-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக