Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

IPL 2022: ஹர்திக்கை கழட்டிவிட்ட மும்பை; சிஎஸ்கேவில் தோனி... யார் யாரை தக்கவைத்திருக்கின்றன அணிகள்?!

ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இம்முறை புதிதாக லக்னோ, அகமதாபாத் என இரண்டு அணிகள் ஐபிஎல்லில் இணைகின்றன. மிகப்பெரிய தொகைக்கு இந்த அணிகளை வாங்கியது RSPG மற்றும் CVC Capital நிறுவனங்கள். இந்நிலையில் 4 வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இரண்டு இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அல்லது மூன்று இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை ஒரு அணியால் தக்கவைத்துக்கொள்ள முடியும். முடிவெடுக்க நவம்பர் 30-ம் தேதி வரை அணிகளுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் எட்டு அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யாரென அறிவித்திருக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ்
  • ரோகித் ஷர்மா - ரூ.16 கோடி

  • ஜஸ்ப்ரீத் பும்ரா- ரூ.12 கோடி

  • சூர்யகுமார் யாதவ்- ரூ.8 கோடி

  • கெய்ரான் பொல்லார்ட்- ரூ.6 கோடி ✈️

ரஸல் - வருண் சக்ரவர்த்தி
  • ஆண்ட்ரே ரஸல்- ரூ.12 கோடி ✈️

  • வருண் சக்கரவர்த்தி- ரூ.8 கோடி

  • வெங்கடேஷ் ஐயர்- ரூ.8 கோடி

  • சுனில் நரைன்- ரூ.6 கோடி ✈️

சஞ்சு சாம்சன்
  • சஞ்சு சாம்சன்- ரூ.14 கோடி

  • ஜாஸ் பட்லர்- ரூ.10 கோடி ✈️

  • யாஷஸ்வி ஜெய்ஸ்வால்- ரூ.4 கோடி

  • மயங்க் அகர்வால்- ரூ.12 கோடி

  • அர்ஷ்தீப் சிங்- ரூ.4 கோடி

ரிஷப் பன்ட்
  • ரிஷப் பன்ட்- ரூ.16 கோடி

  • அக்ஸர் பட்டேல்- ரூ.9 கோடி

  • பிருத்வி ஷா- ரூ.7.5 கோடி

  • ஆண்ட்ரிக் நோர்க்யா- ரூ.6.5 கோடி ✈️

விராட் கோலி
  • விராட் கோலி- ரூ.15 கோடி

  • கிளென் மேக்ஸ்வெல்- ரூ.11 கோடி ✈️

  • முகமது சிராஜ்- ரூ.7 கோடி

Kane Williamson | கேன் வில்லியம்சன்
  • கேன் வில்லியம்சன்- ரூ.14 கோடி ✈️

  • அப்துல் சமாத்- ரூ.4 கோடி

  • உம்ரான் மாலிக்- ரூ.4 கோடி

MS Dhoni | தோனி
  • ரவீந்திர ஜடேஜா- ரூ.16 கோடி

  • மகேந்திர சிங் தோனி- ரூ.12 கோடி

  • மொயின் அலி- ரூ.8 கோடி ✈️

  • ருத்துராஜ் கெய்க்வாட்- ரூ.6 கோடி

எந்த அணிகள் சரியாக வீரர்களை தக்கவைத்திருக்கின்றன? கமென்ட்டில் கருத்துகளை பதிவுசெய்யுங்கள்!


source https://sports.vikatan.com/cricket/ipl-2022-mi-leaves-hardik-csk-retains-dhoni-retention-full-details

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக