நடிகர் விஜய் சேதுபதி பெங்களூர் ஏர்போர்ட்டில் இறங்கி மாஸ்டர் செஃப் படப்பிடிப்புக்கு போய்க்கொண்டிருக்க, பின்பக்கத்திலிருந்து ஒருவர் தாக்கிய விவகாரம் கொஞ்ச நாள்களாக இணையதளத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தங்களின் சமூகத்தின் தலைவரை இழிவுபடுத்திவிட்டதாக மஹா காந்தி என்பவர் வீடியோ வெளியிட, தற்போது மீண்டும் விவகாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் தளத்தில், விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவர்களுக்கு 1001ரூ பரிசு என வன்முறையைத் தூண்டும் விதமாக அறிவித்திருக்கிறார்கள்.
Last Night Actor #VijaySethupathi PA attacked in Bengaluru Airport. The Pa reportedly was clearing the walk way for @VijaySethuOffl. When PA pushed a person. In rage, the person kicked him from the back.
— MilagRRRo Movies (@MilagroMovies) November 3, 2021
No case registered. pic.twitter.com/tq7zQ1sDWM
என்ன நடந்தது என விஜய் சேதுபதியின் நண்பர்களிடம் பேசினோம். "நாங்கள் விமானத்தில் வந்தபோது எங்களை ஒருவர் செல்போனில் படம் எடுத்துக்கொண்டே இருந்தார். அதைக் கேள்வி கேட்ட போது அதுவே வாக்குவாதமாக வளர்ந்தது. பேசியவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. போலீஸ் வரை கொண்டுபோய் பிரச்னைத் தீர்க்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கியபிறகும் அந்த நபர் வாக்குவாதத்தைத் தொடர்ந்தார். அதனால்தான் பிரச்னையே! அவர் விஜய் சேதுபதியின் ரசிகரும் இல்லை. ரசிகர்கள் அப்படி ஒருபோதும் நடந்துகொள்ளமாட்டார்கள். சேதுபதி எப்போதும் வெளியூர்களுக்குச் சென்றால் உடன் நெருங்கிய நண்பர்களை மட்டுமே துணைக்கு அழைத்துச் செல்வார். அவரிடம் பாதுகாவலர்கள் இல்லை. அவர் மக்களோடு எப்போதும் கலந்திருக்கவேண்டும் என்று நினைப்பவர். அதுதான் அவர் இயல்பு. நீங்கள் அவரை பொதுவாக அனுமானிக்க முயன்றாலே இது தானாக தெரிந்துவிடும். இதில் ரகசியம் ஒன்றுமில்லை. அங்கே சாதி பற்றிய எந்த உரையாடலும் நடக்கவில்லை. விளம்பரத்திற்காக இவை அந்தக் குறிப்பிட்ட நபரால் நடத்தப்படுகிறது" என்றார்.
விஜய் சேதுபதி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/these-are-cheap-advertisements-from-the-concerned-says-vijay-sethupathis-close-aides
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக