Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: தாக்கலாகிறது வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! -எதிர்க்கட்களின் திட்டம் என்ன?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் கூட்டங்கள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடமாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, அண்மையில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, ஏற்கனவே நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருக்கிறார். அதன்படி இன்று மூன்று வேளை சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் புயலைக் கிளப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வேண்டும் என்ற விவசாயிகளின் வேறு சில கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்ட்மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி - ராகுல் காந்தி

இதுதவிர கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இருக்கிறது. இந்த விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வருவார்கள் என கூறப்படுகிறது. இது தவிர நாடு முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை, அருணாச்சல பிரதேசம் அருகே சீனா ராணுவம் புதிய கிராமங்களை உருவாக்கி வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருவாகியுள்ளதாக கூறப்படும் ஒமிக்கிரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய விவாதங்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Also Read: `பெகாசஸ் விவகாரம்' மறுப்பதற்கு இரண்டு வாரங்களா? - மத்திய அரசின் அணுகுமுறைக்குப் பின்னால்?

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தவிர்த்து வேறு 25 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக போதை மருந்து தடுப்பு மசோதா, சிபிஐ அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன திருத்த மசோதா, தனியார் கிரிப்டோகரன்சி களுக்கு தடை விதிக்கும் மசோதா உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

நாடாளுமன்றம்

பல்வேறு விவகாரங்களில் இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அனல் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மல்லிகார்ஜுன கார்கே ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா ஆகியோர் காங்கிரஸ் சார்பாகவும், சுதீப் பந்தோபாத்யாயா, டெரிக் ஓ பிரையன் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாகவும், டி ஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் திமுக சார்பாகவும் கலந்து கொண்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/parliament-winter-session-starts-today-what-was-the-plan-on-opposition-parties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக