Ad

திங்கள், 29 நவம்பர், 2021

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் கூட்டங்கள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கூட்டங்கள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடமாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, அண்மையில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, ஏற்கனவே நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை கூடிய ஒரு சில நிமிடங்களிலேயே மதியம் 12 மணி வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 12 மணிக்கு அவை கூடிய போது, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சிகள் மசோதா தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/farm-law-cancel-bill-passes-in-lok-shaba

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக