Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

மன் கி பாத்: ``இயற்கையைப் பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்களுக்கு பெரும் பங்கிருக்கிறது!" - மோடி

இந்தியாவை இயற்கையைப் பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்கள் முக்கிய பங்கு வகிப்பதாகப் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசினார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். பொருளாதாரம், அரசியல், அறிவியல், சுகாதாரம், என பல்வேறு விஷயங்கள் குறித்து நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று காலை 83-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மன் கி பாத்

அப்போது பேசிய அவர், ``இந்த மாதம் ஆயுதப்படை கொடி தினம் மற்றும் கடற்படை தினம் ஆகியவை நாம் கொண்டாடவிருக்கிறோம். 1971-ம் ஆண்டு நடந்த போரின் பொன்விழா ஆண்டை அடுத்த மாதம் 16-ம் தேதி கொண்டாடப்போகிறோம். இந்த தருணத்தில், நம் இந்திய வீரர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து அவர்களை வணங்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். சுதந்திர பொன் ஆண்டில் நம் நாட்டுக்காக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி எழுந்திருப்பது, மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியச் சுதந்திரத்தில், பழங்குடியினரின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இயற்கையை நாம் பாதுகாத்தால், அதுவும் நம்மைப் பாதுகாக்கும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, பல்வேறு கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாய் நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த அபாயம், தமிழகத்தின் தூத்துக்குடியில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். தூத்துக்குடியில், பல்வேறு சிறிய தீவுகள் மற்றும் மண் திட்டுகளில் இந்த வகையான அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தூத்துக்குடியில் இந்த இயற்கை பேரிடர் அபாயத்திலிருந்து இயற்கை வழியிலேயே தப்பிப்பதற்காக முயற்சிகளையும், வழிகளையும் அந்த பகுதி மக்களும், சூழலியல் ஆய்வாளர்களும் இணைந்து கண்டறிந்திருக்கிறார்கள்.

அதேபோல, தூத்துக்குடி மக்கள் தீவுகள் மற்றும் மணல் திட்டுகளில் பனைமரங்களை நடுகின்றார்கள். அந்த மரங்கள், சூறாவளி, புயல் என இயற்கை பேரிடர் காலங்களிலும் உறுதியுடன் நிற்கின்றன. எனவே, அந்த மக்களின் இந்த முறை நமக்கு புது நம்பிக்கையை அளிக்கிறது. இயற்கையின் சமநிலையைச் சீர்குலைத்து, அதன் புனிதத்தை நாம் அழிக்கும் போது தான், இயற்கை நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இயற்கை நம்மை ஒரு தாயைப் போல் வளர்த்து, நம் உலகத்தைப் பிரகாசமான வண்ணங்களால் நிரப்பி வைத்திருக்கிறது.

தூத்துக்குடி

உத்தரப்பிரதேசத்தில் 'நூன்' என்ற நதி இருந்தது. அழிவின் விளிம்பிலிருந்த இந்த நதியால், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தனர்.ஆனால், அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது அந்த நதியை மீட்டெடுத்திருக்கின்றனர். இது தான் ஆகாச சிறந்த வளர்ச்சிக்கு உதாரணம்" என்றார்.

Also Read: `தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி நான்!' - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை



source https://www.vikatan.com/news/india/pm-narendra-modi-praises-tuticorin-in-mann-ki-baat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக