Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

இந்த ஒரு ஆப் போதும்! 'நீட்' தேர்வில் ஜெயிக்கலாம்! #NEETly

எந்தத் தேர்வாக இருந்தாலும் சரி, வெற்றிக்கு வழி ஒன்றுதான். தொடர்ந்து முயற்சி, பயிற்சி, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளும் புத்திசாலித்தனம், சுருங்கச் சொன்னால் 'வலிதான் வெற்றியின் ரகசியமே!'...

நீட் 20222 -ஐ இலக்காக வைத்து ஏற்கெனவே வருங்கால டாக்டர்கள் தங்களின் பயிற்சிகளை ஆரம்பித்திருப்பார்கள்! இதற்கு முன் வென்ற மாணவர்கள் நீட்-ஐ எவ்வாறு எளிமையாக ஊதித் தள்ளியுள்ளார்கள் தெரியுமா? அதற்கு அறிவுப்பூர்வமான அறிவியல்பூர்வமான வழி ஒன்று இருக்கிறது, அதுதான் 'மாக் டெஸ்ட் (Mock Test)!' எனும் பயிற்சித் தேர்வு!

நீட் வருவதற்கு முன்பே பலமுறை, நீட் பயிற்சித் தேர்வுகளில் கலந்துகொண்டால், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். நம்மை நாம் சுய மதிப்பீடு செய்துகொள்வதன்மூலம் எந்தெந்த இடங்களில் சருக்குகிறோம் என்பதை அறிந்து நுட்பமாக நம் பயிற்சியை மாற்றியமைக்க முடியும். கடந்த கால நீட் தேர்வுகளில் வென்ற மாணவர்களின் முக்கிய சீக்ரெட் ஃபார்முலாவே இதுதான்!

180 நிமிடங்களில், கொடுக்கப்பட்ட 200 கேள்விகளில் இருந்து 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். இதுதான் நீட் தேர்வு நமக்கு முன்னிறுத்தும் முக்கிய சவால்! நேரம் மட்டுமின்றி, தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மார்க்கிங்கும் உண்டு!

பயிற்சித் தேர்வுகளில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த தெளிவும், அதன் கட்டமைப்பும் புரிகிறது. நேரத்தை சரியாகப் பயன்படுத்த முடிவதுடன், சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நெகட்டிவ் மார்க்ஸ் விழாமல் தப்பிக்க உதவுகிறது. இதனால், தேர்வு நாளன்று தன்னம்பிக்கையுடன் கூலாக பரீட்சை எழுத முடியும்.

கடந்த 19 வருடங்களில் வெளிவந்த இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology) வினாத்தாள்களை அலசி ஆராய்ந்து மாணவர்களுக்காக மாதிரி நீட் வினாத்தாள்களை வழங்குகிறது NEETly மொபைல் ஆப்.

* உங்க மொபைலில் NEETly ஆண்ட்ராய்டு ஆப் டவுன்லோடு செய்யுங்க

* மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்யுங்க

* இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தனித்தனியாக உள்ள வினாக்களுக்கு ஃபோனிலேயே விடையளிக்க ஆரம்பிங்க!

* வாரம் ஒருமுறை வெளியிடப்படும் பயிற்சித் தேர்வுகளில் கலந்துகொண்டு உங்களின் மார்க்ஸ் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!

பயிற்சித் தேர்வுகளில் எந்தெந்த மாநிலத்து மாணவர்கள் என்னென்ன மார்க்ஸ் வாங்கியிருக்கிறார்கள் என்பதை NEETly செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இதனால் நம்முடைய செயல்திறன் எப்படியுள்ளது என்பதனை கணக்கிட முடியும்!

மேலும், NEETlyஆப்-ல் அனைத்து பாடங்களுக்கும் கேள்விகள் மட்டுமின்றி அவற்றின் பதில்களும் விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன! இதனால் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ள பயிற்சிக் களமாக அமைகிறது NEETly.

ஒரு மாணவர் குறைந்தது 15-30 மாதிரி பயிற்சித் தேர்வுகளில் கலந்துகொள்வதால் சிறப்பாக நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று அனைத்து இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதனால் வருங்கால மருத்துவர்கள் தாமதம் செய்யாமல் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்களின் வாழ்க்கையை நீங்கள் நினைத்தது போல அமைத்துக்கொள்ளலாம்!

NEETly ஆப் டவுன்லோடு செய்ய, இங்கே கிளிக் செய்யவும்!



source https://www.vikatan.com/news/announcements/achieve-neet-with-neetly-app

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக