Ad

வெள்ளி, 26 நவம்பர், 2021

Tamil News Today: தொடரும் கனமழை... தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி!

தொடர் கனமழை...தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கிய கனமழையானது நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து தற்போதும் பெய்து வருகிறது. தென் கடலோர மாவட்டங்களிலும் கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பல்வேறு முக்கிய சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றது. சென்னையில் தற்போது வரை இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது, சில சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம்

தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை அருகே ஆவடியில் 20 செ.மீ மழையும் சோழவரத்தில் 15 செ.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாமல்லபுரம், செங்கல்பட்டில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை ஆளுநர் மாளிகை அருகே மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் தேங்கி நிற்கும் தண்ணீர் சாலையில் திறந்து விடப்படுவதால் சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நடப்பதாக கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-27-11-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக