Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

வரிச்சுமையைக் குறைக்க அரசே தரும் வழிகள் இவைதாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 52

பர்சனல் ஃபைனான்ஸில் வரி சேமிப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

``வரியைக் குறைப்பதற்காகவாவது மக்கள் சேமிப்பின் பக்கம் திரும்புவார்கள்; அதனால் ஆரம்பிக்கும் சேமிப்புப் பழக்கம் தொடர்ந்து அவர்கள் செல்வ நிலை உயரும்; அந்த சேமிப்பினால் நாட்டுக்கும் நலம் விளையும்” என்றெண்ணி அரசு தரும் சலுகைகளைப் பார்த்து வருகிறோம்.

சென்ற அத்தியாயத்தில் பார்த்த செக்ஷன் 80 சி தவிர வேறு பல செக்ஷன்களும் வரிக்கழிவு (நாம் செய்யும் சில செலவுகளை / முதலீடுகளை வருமானத்தில் இருந்து கழிப்பது) மற்றும் வரிவிலக்கு (நமக்கு வரும் வருமானத்தில் சிலவற்றுக்கு விலக்களிப்பது) அளிக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை இன்று பார்க்கலாம்...

Tax (Representational Image)

செக்ஷன் 24

செக்.80சியின் கீழ் வீட்டுக் கடனின் அசல் தொகைக்கு வரிக்கழிவு கிடைப்பதைப் பார்த்தோம். அதேபோல இந்த செக்ஷன்24இ-ன் கீழ் வீட்டுக்கடனுக்காக நாம் கட்டும் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை வரிக்கழிவு கிடைக்கிறது. சொத்து வாங்குவதற்காக உபயோகப் படுத்தப்பட்ட பர்சனல் லோன் வட்டிக்கும் இந்த வரிக்கழிவு உண்டு. வட்டி மட்டுமின்றி, லோன் ப்ராசசிங் ஃபீஸ், ஃபோர்க்ளோஷர் சார்ஜஸ் போன்ற வீட்டுக்கடன் சார்ந்த செலவுகளையும் இதில் சேர்க்கலாம்.

80 சிசிசி / 80 சிசிடி

சீனியர் சிட்டிசன்களின் நலம் குறித்த கவலை அரசுகளுக்கு எப்போதும் உண்டு. அனைத்து முதியோருக்கும் அரசு பென்ஷன் தர இயலாத நிலையில், அவரவர் பென்ஷன் தேவைகளுக்காக மக்கள் சேமிக்கும் பணத்திற்கு வரிக்கழிவு தந்து உதவுகிறது.

80சிசிசியில் ஆன்யுட்டி பென்ஷன் ப்ளான்களுக்காக நாம் சேமிக்கும் தொகை,

80சிசிடி (1)இல் நேஷனல் பென்ஷன் ஸ்கீமிற்கு நம் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை,

80சிசிடி(2)இல் சம்பளதாரர்களுக்காக கம்பெனிகள் நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் கட்டும் தொகை ஆகியவற்றுக்கு வரிக்கழிவு உண்டு.

இவை அனைத்தும் 80சியின் ரூ.1.50 லட்சம் வரிக்கழிவின் கீழ் வரும் நிலையில் 80சிசிடி(1பி)யின் கீழ் நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் கூடுதலாக சேமிப்போருக்கும், அடல் பென்ஷன் யோஜனாவில் சேமிப்போருக்கும் ரூ.50000/-க்கான வரிக்கழிவு கூடுதலாகக் கிடைக்கிறது.

Tax (Representational Image)

Also Read: வருமான வரிச்சுமையைக் குறைக்கும் இந்த வழிகள் பற்றித் தெரியுமா? - 51

80 டிடிஏ

வங்கி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்ஸ் அக்கவுன்டுகளில் இருந்து வரக்கூடிய வட்டி வருமானத்திற்கு ரூ.10,000/- வரை வரிவிலக்கு உண்டு. ஃபிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றில் கிடைக்கும் வட்டி இதில் சேராது.

80டிடிபி

இது சீனியர் சிட்டிசன்களுக்கு வரக்கூடிய வட்டி வருமானத்தில் ரூ. 50,000/- வரை வரிவிலக்கு தருகிறது.

80ஜி

அரசு அல்லாத நிறுவனங்களுக்கும் (NGO) அரசின் நிவாரண நிதி ஃபண்டுகளுக்கும் நாம் வழங்கும் நன்கொடைகளுக்கு அந்த நிறுவனத்தின் தகுதியைப் பொறுத்து 50% அல்லது 100% வரிக்கழிவு கிடைக்கும். இதை நிரூபிக்க ரசீது அவசியம்.

80இ

மேற்படிப்புகளுக்காக கடன் வாங்கும் நிலையில் இருப்போருக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த விதியின் கீழ் கல்விக்கடனுக்கு நாம் கட்டும் வட்டிக்கு எட்டு வருடங்கள் வரை வரிக்கழிவு உண்டு. இதற்கு லிமிட் கிடையாது.

80டி

நாம் கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தில் செக்.80டியின் கீழ், 60 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரூ.25,000/- வரை வரிக்கழிவு கிடைக்கிறது. ப்ரிவென்டிவ் ஹெல்த் செக் அப் (ரூ.5,000/-), கோவிட் செக் அப் (ரூ.5,000/) மற்றும் ஹெல்த் பாலிஸிக்குக் கட்டும் ப்ரீமியம் ஆகியவை இதன் கீழ் வருகின்றன. சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50,000/- வரை வரிக்கழிவு கிடைக்கும்.

Tax (Representational Image)

Also Read: வாழ்க்கையில் உங்களுக்கு உதவப்போகும் முக்கியமான இன்ஷூரன்ஸ்கள்தான் இவைதாம்! - 50

80ஜிஜி

இதன் கீழ், சம்பளத்தில் ஹெச் ஆர் ஏ (வீட்டு வாடகை அலவன்ஸ்) இல்லாதோரும், சுய தொழில் செய்வோரும் வருடம் ரூ.60,000/- வரை வரிக்கழிவு பெறலாம். ஆனால் குடியிருக்கும் ஊரில் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த வீடு இருப்பது கூடாது.

இன்னும் சில வரிக்கழிவுகள் / விலக்குகள்

உடல் குறைபாடுள்ளோருக்கு ரூ. 75,000/ முதல் ரூ.1.25 லட்சம் வரை வரிக்கழிவு தரும் 80யூ, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரிக்கழிவு தரும் 80ஜிஜிசி என்று பல வித வரிக்கழிவுகளும், விலக்குகளும் உள்ளன. அனைத்துக்கும் நிரூபணமாக சர்டிஃபிகேட் அளிக்கவேண்டும்.

நாட்டை முன்னேற்றும் வரிப்பணம்

வருடாவருடம் நம்மிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி நாட்டைக் கட்டமைக்கும் பல நற்பணிகளுக்கு உதவுவதாகப் பார்த்தோம். ஆகவே வரி ஏய்ப்பை விடுத்து, வரிவிலக்கு மற்றும் வரிக்கழிவுகளை முறையாகப் பயன்படுத்தி நாமும் முன்னேறி, நாட்டையும் முன்னேற்ற உறுதி கொள்வோம்.

- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்



source https://www.vikatan.com/business/finance/few-important-sections-which-give-tax-exemptions-for-senior-citizens

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக