Ad

செவ்வாய், 7 ஜூன், 2022

``இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 70% குறைத்துள்ளது பாஜக அரசு" - அமித் ஷா

டெல்லியில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தைத் திறந்து வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``வடகிழக்கில் 66 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதியிலிருந்து ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை (AFSPA) மோடி அரசு நீக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையை 70 சதவிகிதம் குறைத்துள்ளது.

பாதுகாப்பான வடகிழக்கு மற்றும் பாதுகாப்பான மத்திய இந்தியாதான் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கில் மொத்தம் 8,700 விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் இந்த எண்ணிக்கை 1,700 எனக் குறைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது 304 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த நிலையில், மோடி ஆட்சியில் வடகிழக்கில் 87 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

பாஜக

திட்டக் கமிஷன், நிதி ஆயோக், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் போன்ற பல நிறுவனங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளன. இந்த தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம், பழங்குடி பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முதன்மையான நிறுவனமாக இருக்கும்.

மேலும், இந்த தேசிய நிறுவனம் கல்வி, நிர்வாக மற்றும் சட்டத் துறைகளில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி சிக்கல்கள் மற்றும் தகவல்களை நுணுக்கமாக ஆராயும். இந்த நிறுவனம் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வள மையங்களுடன் ஒத்துழைத்துத் திறம்படச் செயல்படும்" எனக் குறிப்பிட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/modi-govt-brought-number-of-districts-affected-by-left-wing-extremism-down-by-70

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக