Ad

திங்கள், 6 ஜூன், 2022

உ.பி: `2024 மக்களவைத் தேர்தலே இலக்கு...’ - இடைத்தேர்தல் ரேஸிலிருந்து விலகிய காங்கிரஸ்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில்கூட வெற்றிபெறாததையடுத்து, கட்சிக்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எனினும், சமீப நாள்களில் கட்சியின் மூத்த, முக்கியத் தலைவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறிவருகின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ்

இது குறித்து காங்கிரஸ், ``கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலே இலக்கு" என விளக்கமளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர், அசம்கர் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த நிலையில், தற்போது காங்கிரஸிலிருந்து இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ள ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கான, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலால் கட்சிக்குள் பலரும் அதிருப்திக்குள்ளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-has-announced-that-is-the-party-has-not-participated-in-uttarpradesh-2-lok-sabha-seat-by-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக