எனக்கு சிசேரியன் முடிந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதன் பிறகு எடை எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது. அதைக் குறைக்க நினைக்கிறேன். ஸ்கிப்பிங் செய்தால் பலன் கிடைக்குமா? ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பப்பை இறங்கிவிடும் என்று சிலர் சொல்வது உண்மையா?
- வித்யா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
``ஸ்கிப்பிங் செய்வது மிகச் சிறந்த பயிற்சி. ஆனாலும் நீங்கள் சிசேரியனாகி இரண்டு வருடங்கள் கழித்து, உடற்பயிற்சியை ஆரம்பிப்பதால் முதலில் நடைப்பயிற்சியிலிருந்து தொடங்கலாம். மிதமான பயிற்சிகளை மெள்ள மெள்ளச் செய்ய ஆரம்பித்து, கூடவே வாக்கிங்கும் செய்யலாம். வாரத்துக்கு மூன்று நாள்கள் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் செய்யலாம். உடற்பயிற்சிகளுக்கு உங்கள் உடல் பழக ஆரம்பித்து, உடலளவில் நீங்கள் ஓரளவு பலமாக உணரத் தொடங்கியதும், மூட்டுகளில் அடிபடாமல் குதிக்க முடியும் என்றால் ஸ்கிப்பிங்கையும் ஆரம்பிக்கலாம்.
Also Read: Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் ப்ளீடிங்; அபார்ஷன் அறிகுறியாக இருக்குமா?
ஸ்கிப்பிங் மிகச் சிறந்த கார்டியோ பயிற்சியும்கூட. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஸ்கிப்பிங்குடன், ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யும்போது சீக்கிரம் பலன் தெரியும். ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கும் முன், அது உங்களுக்கு சிரமமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மிகக் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கி, மெள்ள மெள்ள எண்ணிக்கையைக் கூட்டுங்கள். மூட்டு மற்றும் கணுக்கால்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் ஸ்கிப்பிங் செய்வதைத் தவிர்க்கவும். அதை மீறிச் செய்தால் உங்கள் பிரச்னைகள் அதிகரிக்கலாம்.
Also Read: Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு பீரியட்ஸ் வரவில்லை; என்ன காரணம்?
கர்ப்பப்பையில் உங்களுக்கு வேறு ஏதும் பிரச்னைகள் இருந்தால் ஸ்கிப்பிங்கை தவிர்க்கலாம். அப்படியில்லாத பட்சத்தில் ஸ்கிப்பிங் செய்வது, கர்ப்பப்பையைப் பாதிக்காது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/i-had-undergone-cesarean-2-years-ago-will-doing-skipping-affect-uterus
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக