Ad

புதன், 15 டிசம்பர், 2021

``உதயநிதி, வெற்றிக்காக அரும்பாடுபட்டவர்; அமைச்சராக வருவதை வரவேற்போம்!” - கே.என்.நேரு

புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் எம்.எல்.ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன் இல்லத் திருமண விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். நிகழ்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அதிமுக ஆட்சியிலிருந்தபோது, அதிகாரத்திலிருந்தவர்கள் எங்கள் மீது வழக்கு போட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றால், நாங்கள் செய்வதும் அப்படி என்றே வைத்துக் கொள்ளலாம்.

கே.என்.நேரு

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார், தவறு செய்தாலும், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கின்றனர். அப்படி தான் தற்போதும் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் நேர்மையானார்கள் என்றால் நீதிமன்றம் மூலமாகக் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு வாங்கட்டும். ஜனவரி 25-ம் தேதிக்குள் நகர்ப்புறத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதன்படி, தேர்தல் ஆணையம் தேதி அறிவித்து, நகராட்சித் தேர்தல் உறுதியாக நடக்கும். 21 மாநகராட்சிகள், புதிதாக அறிவிக்கப்பட்ட 25 நகராட்சிகள், ஏற்கெனவே உள்ள 125 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்துக்கும் ஒருமுகத் தேர்தலாகவே நடத்தப்படும். தேர்தல் தள்ளிப் போவதற்கான வாய்ப்பு இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக உள்ளது.

உதயநிதி

சட்டமன்ற உறுப்பினரை அமைச்சராக வைத்துக் கொள்வது என்பது முதலமைச்சர் எடுக்கும் முடிவு. சட்டமன்ற உறுப்பினர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக வைத்துக் கொள்ளலாம். அதுல `உதயநிதியை, இப்ப வந்துவருன்னு’ சொன்னா எப்படி, அப்படியெல்லாம் இல்லை. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வெற்றிக்காக அரும்பாடுபட்டவர். தனது தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்படுபவர். அவர் அமைச்சராக வருவதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை. அவர் அமைச்சராக வருவதை வரவேற்போம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/we-will-welcome-if-udayanidhi-becomes-minister-says-kn-nehru

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக