Ad

புதன், 10 நவம்பர், 2021

Live Updates: சென்னையில் இரவு முழுவதும் நீடித்த தொடர் கனமழை! - குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை மாமல்லபுரம், ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கணிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

மழை

சென்னையில் இரண்டு தினங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் மரங்களும், விழுந்திருக்கிறது. இன்று மாலை வரை கன மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதா, தேங்கி நிற்கும் தண்ணீரின் அள்வு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் அதி கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பொது மக்கள் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-11-11-2021-rain-alert-news-and-other-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக