Ad

ஞாயிறு, 7 நவம்பர், 2021

`வேகமாக மோதிக்கொண்ட கார் - பைக்; தூக்கியடிக்கப்பட்டு மின்கம்பத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!'

மதுரை பெருங்குடி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காமராஜ்(20), அஜித் கண்ணன் (20). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இருவரும், நண்பர்கள் 10 பேருடன் 5 பைக்குகளில் தீபாவளி விடுமுறையைக் கழிக்கக் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றனர். பின்னர், அனைவரும் நேற்று மதியம் மதுரை திரும்பினர்.

விபத்துக்குள்ளான பைக்

நிலக்கோட்டை அடுத்த சிலுக்குவார்பட்டி அருகே, ஒருவர் பின் ஒருவராக பைக்குகளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே சிவகங்கையிலிருந்து பண்ணைக்காடு நோக்கி கார் ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில், காமராஜ் ஓட்டிவந்த பைக் நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி, காருக்கு மேலே பறந்து சென்று கீழே விழுந்தது. அதில், காமராஜ் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் பின்னே அமர்ந்திருந்த அஜித் கண்ணன், கார் மோதிய வேகத்தில் தூக்கியடிக்கப்பட்டு மின்கம்பத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான கார்

அஜித் கண்ணனின் உடல் மின்கம்பத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு பதறிப்போன அவரின் நண்பர்கள், கதறி அழுதனர். தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவகங்கையைச் சேர்ந்த கார் டிரைவர் தர்மராஜை (50) கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Also Read: ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து?! -தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழந்த சோகம்



source https://www.vikatan.com/news/tamilnadu/2-youngsters-died-in-a-terrible-accident-in-dindigul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக