தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழை வெள்ளப் பாதிப்புகளை சீர்செய்ய மாநில அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில், பருவமழைக் காரணமாக அக்டோபர் மாதம் 1-ம்தேதி முதல் நேற்றைய தினமான 7-ம் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. இந்த 38 நாட்களில், மழைக்கு மூன்று பேர் மரணித்துள்ளனர். மூன்று கால்நடைகளும் இறந்து மடிந்துள்ளன. நேற்றைய தினம் உயிர் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும், இடைவிடாமல் பெய்துவரும் மழைக்கு நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
அதேபோல், அக்டோபர் தொடக்கத்திலிருந்து தற்போது வரை 75 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 55 கூரை வீடுகள் பகுதி அளவும், 8 கூரை வீடுகள் முழுவதுமாகவும் இடிந்து சேதமடைந்துள்ளன. அதேபோல், 8 ஓட்டு வீடுகள் பகுதி அளவும், ஒரு ஓட்டு வீடு முழுவதுமாக இடிந்து சேதமாயிருக்கின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, 27 நிவாரண முகாம்கள் இருக்கின்றன. தற்சமயம் வரை அவை செயல்பாட்டில் இல்லை. அதில், மக்களும் தங்க வைக்கப்படவில்லை என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/impact-of-rains-situation-of-vellore-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக