Ad

திங்கள், 8 நவம்பர், 2021

Tamil News Today: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு! - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, கடலூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், அது 10,000 கன அடி வீதமாகவும், 6 மணிக்கு 15,000 கன அடி யாகவும் அதிகரிக்கப்பட்டது. தற்போது விநாடிக்கு 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-09-11-2021-rain-alert-and-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக