Ad

செவ்வாய், 9 நவம்பர், 2021

Tamil News Today: `ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது... 25-க்கும் மேற்பட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!’

`ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி’

வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை கன மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று மாநிலத்தில் 27 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர். பெரம்பலூர், மதுரை, அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-10-11-2021-rain-updates-and-other-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக