Ad

செவ்வாய், 9 நவம்பர், 2021

Doctor Vikatan: நெய் உடலுக்கு நல்லதா; ஒரு நாளைக்கு எத்தனை டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்?

நெய் ஆரோக்கியமானதா? தினமும் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் சிலர். ஒரு டீஸ்பூன் நெய்யானாலும் அது உடல் பருமனுக்குக் காரணமாகும் என்கிறார்கள் வேறு சிலர். நெய் நல்லதா, கெட்டதா? ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நெய் சேர்த்துக்கொள்ளலாம்?

- ராகவி (விகடன் இணையத்திலிருந்து)

ஷைனி சுரேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

``அளவோடு எடுத்துக்கொள்ளும்போது எதுவுமே ஆபத்தாவதில்லை. எண்ணெய், நெய் விஷயத்துக்கும் இது பொருந்தும். ஒருவருக்கு ஒருநாளைக்கு 15 முதல் 20 மில்லி எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது ஐசிஎம்ஆர். ஆனால், அதை 20 மில்லி வரை அனுமதிக்காமல், 15 மில்லியுடன் நிறுத்திக்கொள்வது ஆரோக்கியமானது. ஏனெனில் நாம் உட்கொள்ளும் பிற பேக்கேஜ்டு உணவுகளிலும் குறிப்பிட்ட அளவு கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.

எனவே நெய், வெண்ணெய், எண்ணெய் என எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். எதுவானாலும் தினசரி பரிந்துரை அளவைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Ghee

Also Read: Doctor Vikatan: பண்டிகை விருந்து; பலவித பலகாரங்கள்; அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள் உண்டா?

மேற்குறிப்பிட்ட தினசரி பரிந்துரையானது ஆரோக்கியமானவர்களுக்கானது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமுள்ளோருக்கு இது பொருந்தாது. அவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சாதத்துடன் வெண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்துக் கொடுப்பது சிறந்தது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-much-amount-of-ghee-is-good-for-healthy-diet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக