சூழல் மாசு அதிகரித்திருப்பதன் காரணமாக அதன் தாக்கத்திலிருந்தும், இன்னும் நம்மைவிட்டு விலகாத கோவிட் தொற்றிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள இனிமேல் சாதாரண மாஸ்க் உதவாது.... என் 95 மாஸ்க்தான் பாதுகாப்பானது என்று ஒரு செய்தியில் படித்தேன். அது உண்மையா? அந்த மாஸ்க் டெங்குவிலிருந்தும் காக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.
``சுழல் மாசைப் பொறுத்தவரை டெல்லி அளவுக்கு தமிழகத்தில் பெரிய பாதிப்பில்லை. எனவே என் 95 மாஸ்க் தேவையில்லை. மாசிலிருந்தும், கோவிட் உள்ளிட்ட தொற்றுகளிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ள சாதாரண துணி மாஸ்க்கே போதுமானது. என் 95 மாஸ்க்கை நாள் முழுவதும் அணிந்திருப்பது சிரமமாகவும் இருக்கும்.
Also Read: Covid Questions: மாஸ்க் அணிந்தாலே கண்கள் வறண்டுபோகின்றன; என்ன செய்வது?
டெங்கு பாதிப்பிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள முதலில் கொசுக்களிடமிருந்து விலகி, சுகாதாரமான சூழலில் வாழ்வதை உறுதிசெய்யுங்கள். மழைக்காலம் என்றாலும் வீட்டைச் சுற்றி எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள கொசுவலை, கொசுவத்தி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துங்கள். தூசு உள்ளிட்ட அலர்ஜி உள்ளவர்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும்.
Also Read: Covid Questions: மாஸ்க் அணிவதால் முகமெல்லாம் பருக்கள்; என்னதான் தீர்வு?
உங்கள் வசிப்பிடத்தின் அருகில் தண்ணீர் தேங்கியிருந்தாலோ, கொசுப்பரவல் அதிகமிருந்தாலோ அது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துங்கள். அது உங்கள் உரிமையும்கூட."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/with-increasing-air-pollution-should-we-use-only-n95-mask
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக