விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடர் மழையால் கடல் போல் காட்சி அளிக்கும் பேருந்து நிலையம்:




தொடரும் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் இன்று நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளூக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ப்குதியில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.





சென்னையில் தொடர் மழை காரணமாக இரண்டாவது நாளாகவும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, அத்தியாவசிய சேவை வழங்கும் ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சி துறை தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் கொண்டு வெளியேற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-and-rain-updates-on-08-11-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக