Ad

புதன், 10 நவம்பர், 2021

ஏழு கெட்டப்பில் விக்ரம், இர்ஃபான் பதானின் கால்ஷீட் ‘கோப்ரா‘ படப்பிடிப்பு தாமதமாவது ஏன்?

விக்ரம் இப்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்‘, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா‘, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘மகான்‘, பா.ரஞ்சித்தின் படம் என பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ‘மகான்‘ படம், இப்போது ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. 'மகான்' ஒடிடியில் ரிலீஸ் ஆகலாமென பேச்சும் கிளம்பியிருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் தனது போர்ஷனையும் விக்ரம் முடித்துக் கொடுத்துவிட்டார். இதில் ‘மகான்‘ படத்துக்கு முன்னரே ‘கோப்ரா‘ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து ‘கோப்ரா‘வை இயக்கி வருகிறார். இது ஒரு ஸ்ட்ராங்கான சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லர்.

கோப்ரா

Also Read: விக்ரம் செல்லப்பெயர், நிஜ ஸ்டன்ட்ஸ், பாரீஸில் ஷூட்டிங்! - `கோப்ரா' அப்டேட்ஸ்

படத்தில் விக்ரமுக்கு ஏழு கெட்டப்புகள். விக்ரம் தவிர, ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். படத்தின் முக்கியமான போர்ஷன் ஒன்று ரஷ்யாவில் படமாக்க வேண்டியிருந்தது. கடந்த பிப்ரவரியின் போது விக்ரம், இர்ஃபான் பதான் என முக்கியமான ஆட்களோடு ரஷ்யா கிளம்பி போன படப்பிடிப்புக் குழு, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பாதியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியது. அங்கே மீதம் படமாக்க வேண்டிய காட்சிகள் இருக்கிறதாம். தவிர, இர்ஃபான் பதான் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும்ப டமாக்க வேண்டியிருக்கிறது. அவர் டி20 கிரிக்கெட்டில் பிசியாகி விட்டதால் அவருக்காகப் படப்பிடிப்புக் குழு காத்திருக்கிறது என்கிறது ‘கோப்ரா‘ வட்டாராம். படத்தில் விக்ரம் ஏழு கெட்டப்புகள் என்பதால் மிரட்டலான காட்சிகளுக்காக கிராபிக்ஸ் வேலைகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/cinema/article-about-cobra-movie-shooting-delay-and-other-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக