Ad

வியாழன், 20 மே, 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?! - நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் #NowAtVikatan

முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை!

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வரும் 24-ம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இந்த முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கை குறித்து கருத்து கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும், இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் எனத் தெரிகிறது.



source https://www.vikatan.com/news/general-news/21-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக