Ad

சனி, 29 மே, 2021

ராஜஸ்தான்:`பட்டப்பகலில் மருத்துவத் தம்பதியினர் சுட்டுக்கொலை’ - மர்ம நபர்களைத் தேடும் காவல்துறை!

ராஜஸ்தானில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் மருத்துவ தம்பதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராஜஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சிதா கோலி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த மருத்துவ தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். பலியானவர்கள் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி சீமா குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Murder

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே மாவட்டத்தில் தர்சொனி என்ற கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சிதா கோலியின் கார் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தொடர்ந்து மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா, "நேற்று இரவு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடந்தது, இன்று ஒரு மருத்துவ தம்பதியினர் பகல் நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதல்வர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் இல்லையெனில் ராஜஸ்தானில் பரிதாபகரமான சட்டம் ஒழுங்கு நிலைமையை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்குவார்கள் " என்று கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/rajasthan-doctor-couple-shot-dead-in-car

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக