Ad

திங்கள், 31 மே, 2021

முதல்வரிடம் பாராட்டு பெற்ற தூய்மைப் பணியாளர்; உடல்நலக் குறைவால் முடக்கம்... உதவுமா அரசு?

பெரம்பலூர் மாவட்டம் வேப்பம்தட்டையடுத்துள்ள வ.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (45). அதே ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி. இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. அய்யாதுரை கொரோனா தடுப்புப் பணியில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டு ஊராட்சிப் பகுதி முழுவதும் தூய்மையாக இருப்பதற்கு முழு காரணமாக இருந்து வந்தவர்.

தூய்மை பணியில் அய்யாதுரை

கடந்த வருடம் கொரோனா பரவலை தடுப்பதற்காக அய்யாதுரை தான் பணிபுரிந்த ஊராட்சியில் தூய்மை பணியினை தீவிரமாக மோற்கொண்டு வந்தார். அப்போது அவரின் அம்மா அங்கம்மாள்(65) உயிரிழந்தார். தன் அம்மாவிற்கான இறுதிச் சடங்கை செய்த அடுத்த நாளே பணிக்கு வந்து தூய்மை பணியினை செய்யத் தொடங்கி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அய்யாதுரை. தன் தாய் மறைந்த நிலையிலும், பெரும் தொற்றுப் பரவிய அந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தன் சோகத்தையும் பொருட்படுத்தாமல் பணிக்கு வந்ததை அந்த நேரத்தில் பலரும் பாராட்டினார்கள்.

இதனையறிந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் மூலம் அய்யாதுரையை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலையிலும் தன் பணியை சிறப்பாகச் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதையடுத்து அவருக்குக் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. ஆனாலும் அய்யாதுரைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

கொரோனா வார்டில் சிகிச்சையிலிருக்கும் தூய்மை பணியாளர்

Also Read: `தாயின் இறுதிச்சடங்கு முடிஞ்சதும் கொரோனா தடுப்பு வேலை' -கலங்கவைத்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர்

இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இதனையறிந்த வ.களத்தூர் ஊராட்சியினர், தன்னலம் பாராமல் பணிசெய்த அய்யாதுரைக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ஊராட்சி மன்றத் தலைவரான கோ.பிரபு தனது முகநூல் பக்கத்தில் உதவி கேட்டு பதிவிட்டுள்ளார்.

``அய்யாத்துரை உடல்நிலையில் ஏற்பட்ட குறைபாட்டால் மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கிறார். அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்தால்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்காரா எனத் தெரியவரும். ஆனால் சிடி ஸ்கேன் எடுப்பது தாமதமாகி வருகிறது. உடனடியாக அவருக்கு நல்ல முறையில் உரிய சிகிச்சை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பொருளாதார ரீதியான உதவிகள் கிடைப்பது அய்யாதுரையின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்கிறார் கோ.பிரபு.

அலுவலகத்தில் அய்யாதுரை

பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றோம். அய்யாதுரைக்கு உரிய சிகிச்சையும், உதவியும் கிடைக்க உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/perambalur-frontline-worker-who-received-many-appreciation-is-in-need-of-financial-aid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக