Ad

வெள்ளி, 28 மே, 2021

``மகனும், நவம்பர் ஸ்டோரியும் இந்தப் பிறந்தநாளை ஸ்பெஷல் ஆக்கிட்டாங்க!" - `மைனா' நந்தினி

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் `நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது. தமன்னாவின் மிரட்டும் நடிப்பில் வெளிவந்த இந்த வெப் சீரிஸில் `மைனா' நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலகல நந்தினியாக மட்டுமே அறியப்பட்டுவந்த நந்தினிக்குள்ளே ``இப்படி ஒரு நந்தினி இருக்காங்களா..?" என நினைக்க வைத்திருக்கிறது அவரின் யதார்த்தமான நடிப்பு. நவம்பர் ஸ்டோரியில் நடித்த அனுபவம் குறித்து மைனா நந்தினியிடம் பேசினோம்.

``காமெடி கதாபாத்திரங்கள்ல நடிக்குறது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதே வேளை, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாற முடியுறதுதான் கத்துக்குறதுக்கான அடுத்தடுத்த கட்டம்னு நினைக்குறேன். `நவம்பர் ஸ்டோரி' எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா... என் குட்டி மகன் துருவனும் நவம்பர் ஸ்டோரி ஷூட்டிங்குக்கு தினமும் என்கூட வந்திருக்கான். அதுவும் இல்லாம துருவனோட கொண்டாடுற என்னோட முதல் பிறந்தநாள்லதான் நவம்பர் ஸ்டோரியும் ரிலீஸ் ஆகியிருக்கு. என்னோட முப்பதாவது பிறந்தநாளை மறக்கவே முடியாதுங்க. வாழ்க்கைக்கான அர்த்தத்தை ஆழமா உணர ஆரம்பிச்சிருக்கேன்" என பிரமிப்பு குறையாமல் பேசுகிறார் மைனா நந்தினி.

``2019 நவம்பர் 23-ம் தேதி நவம்பர் ஸ்டோரி ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணாங்க. அதுக்கப்புறம் சில மாசங்கள்லேயே லாக்டௌன் வந்துடுச்சு. ஊரடங்குல தளர்வு வரவர ஷூட்டிங் ஆரம்பிச்சிடும்ன்னு நெனச்சோம். ஹீரோயின் தமன்னாவுக்கும் பாம்பேயில இருந்து வர்றது கஷ்டம். அதுக்கிடையில நானும் ப்ரெக்னென்ட் ஆகிட்டேன். அதனால வாய்ப்பு போயிடுமோன்னு ரொம்ப பயந்தேன். எனக்கு கிடைச்ச கேரக்டர் கைவிட்டுப் போயிடக் கூடாதுனு ரொம்ப பயந்தேன். ஒருவழியா பாப்பா பொறக்குற வரைக்கும் லாக்டௌனால ஷூட்டிங்கும் நடக்கல. கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.

மைனா நந்தினி

``காலையில எந்திரிக்குறகுது வொர்க் அவுட் பண்றதுன்னு கர்ப்பகாலம் ரொம்ப சூப்பரா போச்சு. அதே நேரம் வேலை எதுவும் இல்லாம லாக் டௌனும் நீண்டுகிட்டே போக டிப்ரெஷன் வந்துச்சு. துருவன் பிறந்ததுக்குப்புறம் எல்லாமே நல்லா நடக்கும்னு நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன். அவன் வயித்துக்குள்ள இருந்து வெளிய வந்து ஒரே வாரத்துல ஷூட்டிங்கும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கன்னா பாருங்களேன்..!

தினமும் துருவனோடதான் ஷூட்டிங்குக்கு போனேன். அப்படியே அவனோடதான் நவம்பர் ஸ்டோரியும் போச்சும். அம்மா கேரவன்ல இருந்து அவனை பாத்துப்பாங்க... நடுவுல நடுவுல வந்து குழந்தைக்கு ஃபீட் பண்ணிட்டு போய் ஆக்ட் பண்ணினேன். குண்டாகிட்டா வாய்ப்புகள் கிடைக்காதுன்னு பேச்சுகள் இருந்துது. அதையெல்லாம் நான் கண்டுக்கவே இல்ல. ஒருவேளை வெயிட் போட்டுட்டா என்ன ரோல் கிடைக்குமோ அதைப் பண்ணிக்கலாம்னு ரிலாக்ஸ்டா இருந்தேன்.

மைனா நந்தினி

Also Read: நவம்பர் ஸ்டோரி: கொலைக்களத்தில் தமன்னா... குற்றவாளி யார்? சஸ்பென்ஸ் த்ரில்லரில் சர்ப்ரைஸ் உண்டா?

``இவ்ளோ சக்தியையும் பாசிட்டிவிட்டியையும் கொடுத்தது என் மகன்தான். போன வருஷம் வயித்துக்குள்ள இருந்தவன் இந்த வருஷம் என் கையில இருக்கான். நிறைய சேட்டைகளைப் பண்ணிக்கிட்டு. இதைவிட வேற என்ன வேணும்..?'' எனக் கண்கள் மின்னப் பேசுகிறார் மைனா நந்தினி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/myna-nandhini-speaks-about-her-november-story-web-series-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக