Ad

வெள்ளி, 28 மே, 2021

கொரோனா: `இந்தியாவில் 2-வது நாளாக 2 லட்சத்துக்கும் குறைவாக பதிவான ஒருநாள் பாதிப்பு’ - மத்திய சுகாதாரத்துறை #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,73,790 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,77,29,247 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,617. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,22,512 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 22,28,724 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,84,601 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 20,89,02,445 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/29-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக