Ad

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

தேனி: தாய் கண்முன்னே மகனும்... கணவர் கண்முன்னே மனைவியும் சாலை விபத்தில் பலி!

தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் நேற்று காலை மனைவி ராஜலட்சுமியுடன் (வயது 45) வீட்டில் இருந்து பெரியகுளம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். லெட்சுமிபுரம் அடுத்துள்ள கைலாசபட்டி அருகே சென்றபோது, கம்பத்தில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், ஜெயராமன் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

Also Read: தேனி: சசிகலா போஸ்டர்மீது ரவீந்திரநாத் போஸ்டர்! - நள்ளிரவில் அ.தி.மு.க - அ.ம.மு.க வாக்குவாதம்

சாலை விபத்து

ஜெயராமனின் மனைவி ராஜலெட்சுமி கிழே விழுந்து, அரசுப் பேருந்தின் சக்கரங்களில் சிக்கினார். இதில், ராஜலெட்சுமி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார். ஜெயராமன் ஹெல்மெட் அணிந்திருந்ததால், உயிர்தப்பினார்.

படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு பேருந்து ஓட்டுநர், தென்கரை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததைத் தொடர்ந்து, விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலை விபத்து

Also Read: தேனி: `உங்க அக்கவுன்ட்ல ரூ.49,500 போட்டாச்சு!’- ஏ.டி.எம் மையத்தில் பணம் சுருட்டிய இளம்பெண்

போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் பூபதிராஜா(வயது 20). தனது தாய் முருகேஸ்வரியுடன் தனது இருசக்கர வாகனத்தில், தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார். பழனிசெட்டிபட்டிப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, மினி பேருந்தை முந்திச் சென்றுள்ளார் பூபதிராஜா. அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழக்க, இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். பின்னால் வந்த போர்வெல் லாரி இருவர் மீதும் மோதியுள்ளது. இதில், பூபதிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

படுகாயமடைந்த முருகேஷ்வரி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போர்வெல் லாரி ஓட்டுநர் மூர்த்தி (வயது 21) என்பவர், பழனிசெட்டிபட்டி காலநிலையம் சென்றார். வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்து

Also Read: தேனி: பன்றி தழுவும் போட்டி - மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் 17 நாள்களுக்குப் பிறகு வழக்கு!

தேனியின் இருவேறு இடங்களில் நடந்த இந்த சாலை விபத்தில், தாய் கண்முன்னே மகனும், கணவர் கண்முன்னே மனைவியும் பரிதாபமாக பலியானது தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/theni-two-died-in-road-accidents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக